இரண்டு பெண்ணுறுப்பு... 16 வயதில் தெரிந்த உண்மை! தைரியமாக பகிர்ந்த இளம் பெண்
- Get link
- X
- Other Apps
அவுஸ்திரேலியா இரண்டு பெண்ணுறுப்புடன் பிறந்த பெண் ஒருவர் அதை தன்னுடைய 16 வயதிலே தெரிந்து கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் Hunter Valley-ஐ சேர்ந்தவர் Tee Bartlett. தற்போது 24 வயதாகும் இவர் பிறக்கும் போதே இரண்டு பெண் உறுப்புடன் பிறந்துள்ளார்.
இதை சாதரணமாக எடுத்துக் கொண்ட அவர் எல்லா பெண்களுக்கும் இது போன்று தான் இருக்கும் என நினைத்துள்ளார்.
அதே போன்று ஒவ்வொரு மாதத்தின் மாதவிடாயின் போது இரண்டு Tampon-களை பயன்படுத்துவதும் சாதரணமான ஒன்றே என நினைத்துள்ளார்.
ஆனால், அவர் தன்னுடைய 16 வயதில் தான் இதைப் பற்றிய உண்மையையே தெரிந்து கொண்டுள்ளார்.
அவர் தன் தாயிடம் இதைப் பற்றி கூறி, நான் எந்த ஒன்றில் Tampon-ஐ வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன் பின்னரே அவர் தாய்க்கு உண்மை தெரியவர, மருத்துவரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், இறுதியாக vaginal septum இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் சமூக ஊடகங்களில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், ஒரு நாள் என்னுடைய நண்பர் மற்றும் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த போது, நான் அவரிடம் இது குறித்து கேட்டேன். உடனே என் அம்மா இரண்டு கிடையாது, ஒன்று தான் என்று கூறினார்.
நாங்கள் சிறிது நேரம் வாதிட்டோம். அதன் பின் அம்மா உடனடியாக மருத்துவரை சந்திக்கும் படி கூறினார். அப்போது தான் இரண்டு இருக்க கூடாது என்பது தெரியவந்தது.
இது என்னை ஒரு பைத்தியம் பிடிக்க வைப்பது போல் உணர வைத்தது. இரண்டு மருத்துவர்களை சந்தித்து, அதன் பின் மூன்றாவது ஒரு மகளிர் மருத்துவ நிபுணரின் மூலம், இரண்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
இது இப்போது பிரச்சனையாக இல்லையென்றாலும், கணவனுடன் நெருக்கமாக இருக்கும் போதோ, அல்லது பிரசவத்தின் போது, பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
அதன் பின் 17 வயதில் நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இதைத் தொடர்ந்து அது குறித்து ஆராய்ச்சி செய்தேன்.
அப்போது அதைப் பற்றி தெரிந்து கொண்டேன். இந்த நேரத்தில் என்னுடைய காதலன் எனக்கு ஆதரவாக இருந்தார். நான் அவரிடம் சொன்னபோது, நேரம் வரும்போது நாம் இதை சமாளிப்போம் என்று கூறினார். அவரின் ஆதரவு எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
குழந்தை பிறக்கும் போது, வெளிப்படையாக வயிற்றில் குழந்தைகளுக்கு vaginal septum இருப்பது சாதரணமானது தான், அது காலப்போக்கில் கரைந்துவிடும்.
ஆனால், எனக்கு அது கரையவில்லை. இதன் காரணமாகவே நான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இனி நான் அதைப் பற்றி கவலைப்பட தேவையில், அது முடிந்துவிட்டது. இப்போது நன்றாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப் பற்றி அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்ட பின்பு, இவரைப் போன்ற பல பெண்கள் இதே போன்ற சூழ்நிலையை சந்தித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இது போன்ற விஷயங்களை பெண்கள் சமூக ஊடகங்களில் பகிர்வது கொஞ்சம் கூச்சப்படுவர், ஆனால் அதைப் பற்றி நினைக்காமல் தன்னுடைய அனுபவம் பிறருக்கு உதவலாம் என்ற எண்ணத்தில் தைரியமாக இவர் பதிவிட்டுள்ளது சிலரின் பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ALSO READ : பொது இடத்தில் சீருடைகளை கழற்றிய விமான பணிப்பெண்கள்! இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்திய போராட்டம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment