நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: சிங்கப்பூர், தாய்லாந்துக்கு இந்தியர்கள் வர அனுமதி

சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் கட்டாயமாக 2 தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது.
சிங்கப்பூர்:

கொரோனா பரவலை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டு விமான சேவைகளை சிங்கப்பூர் அரசு ரத்து செய்தது.

அதன் பிறகு நோய் தொற்று குறைந்ததை அடுத்து ஒரு சில நாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டது. ஆனாலும் அத்தியாவசியப் பணிகளுக்கு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.

குறிப்பாக சிங்கப்பூரில் வீட்டு வேலைகள் உள்ளிட்ட சாதாரண பணிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் செய்து வந்தனர். அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

மற்ற பணிகளுக்கு செல்பவர்களை அனுமதிக்கவில்லை. இப்போது மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 13 நாட்டை சேர்ந்தவர்கள் 2 தடுப்பூசி செலுத்தி இருந்தால் அங்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனாலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை, மியான்மர் ஆகிய 5 நாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வழக்கம் போல செல்லலாம். ஆனால் அவர்கள் சிங்கப்பூர் வருவதற்கு முன்பாக 14 நாட்கள் பயணம் செய்த தகவல்களை தர வேண்டும். 2 தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல தாய்லாந்து நாடும் இந்தியர்களுக்கு தடை விதித்து இருந்ததை விலக்கிக் கொண்டுள்ளது.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!