நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தேனை தெரிந்து கூட இதனுடன் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்! உயிருக்கே உலை வைத்துவிடும்

 நாளுக்கு நாள் மாறி வரும் உணவு பழக்கங்கள் காரணமாக பலருக்கு உடல் எடை சீக்கிரமாக அதிகரித்துவிடுகிறது. எப்படியாவது உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சிலர் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீருடன் தேனை சேர்த்து குடிப்பதுண்டு. இது கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பை உறிஞ்சவும் எடை அதிகரிப்பதைத் தடுக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் போன்ற பல ஆரோக்கிய சத்துக்கள் நிரம்பியுள்ளது. இருப்பினும் ஆயுர்வேத முறையில் தேனை எந்த சூடான வடிவத்திலும் பயன்படுத்த அறிவுறுத்தபடவில்லை.



  • தேன் சாப்பிடுவதால் இருமலை போக்கும். குடலை சுத்தப்படுத்துகிறது, காயங்கள் மற்றும் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் சருமத்திற்கு நல்லதாகும். பதப்படுத்தப்பட்ட சர்க்கரையால் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பாகவும் கருதப்படுகிறது. இது தவிர கால்சியம், இரும்பு, பொட்டாசியம் ஆகியவை நிரம்பியுள்ளன.

  • தேனை நேரடியாக சூடான பால், வெதுவெதுப்பான நீர், சூடான எலுமிச்சை நீர் அல்லது தேநீருடன் கலக்கக்கூடாது என்றும் இது பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத நிபுணர்கள் கூறியுள்ளனர்.

  • சூடான தேன் உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் மெதுவான விஷமாக மாறும். அதே சமயம் கடைகளில் கிடைக்கும் தேனில் சோள சிரப் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிற செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும் அனைத்து தேன்களும் அதீத வெப்பநிலையில் சூடுபடுத்தப்பட்டு தொகுக்கப்படுகின்றன. இதனால் கடைகளில் தேனை வாங்குவதை தவிர்க்க வேண்டும். தேனீக்களிடமிருந்து நேரடியாக இயற்கை தேனை விற்கும் நபர்களிடமிருந்து தேனை வாங்கி பயன்படுத்துவது நல்லது.  




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!