கொலை செய்யப்பட்ட தனது ஜோடி பாம்பு: பழிவாங்க காவல்நிலையம் வந்த பாம்பு! பின்பு நடந்தது என்ன?
- Get link
- X
- Other Apps
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் அசம்கரில் பாம்பு ஒன்று தனது ஜோடி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு வந்து செய்த காரியம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.
காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்த நபர், புகார் கொடுத்துவிட்டு தனது காரில் கிளம்பிய போது, அந்த ஜோடி பாம்பு ஒன்றின் மீது கார் ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனை அவதானித்த மற்றொரு பாம்பு குறித்த காரை வேகமாக துரத்திக்கொண்டே சென்றுள்ளது.
பாம்பு சாலையில் இறந்து கிடப்பதைக் கண்ட சிலர், காவல் நிலையம் அருகே குழி தோண்டி புதைத்துவிட்டனர். மற்றொரு பாம்பு இனிமேல் இங்கு வராது என்று நினைத்த நிலையில், குறித்த பாம்பு புதைக்கப்பட்ட இடத்திற்கு மற்றொரு பாம்பு திடீரென வந்துள்ளது.
அங்கு சிறிது நேரம் காத்திருந்த பின்பு, காவல் நிலையத்திற்குள் சென்ற அந்த பாம்பு, மறியல் செய்வதுபோல் அங்கு படமெடுத்து அமர்ந்ததை அவதானித்த பொலிசார் பயத்தில் நின்றுள்ளனர்.
சிலர் பாம்பை அடிக்க முயன்ற நிலையில், பொலிஸ் அதிகாரி அடிக்க வேண்டாம் என்று கூறியதையடுத்து, பாம்பு பிடிப்பவர்களை வரவழைத்து பிடிக்க செய்து காட்டில் கொண்டு சென்றுள்ளனர்.
நாகப்பாம்பு காவல் நிலையம் முன் சாலையில் அமர்ந்து மறியல் செய்ததை பார்த்த பொதுமக்கள், நாகப்பாம்பு தனது ஜோடியின் மரணத்திற்கு புகார் அளிக்க வந்திருக்கிறது என்று சொல்லத் தொடங்கினர். பாம்பு பழி வாங்கும் என்பதை உண்மையாக்கும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
also read : வெங்காயத்தின் உருவில் விபரீதம்: அமெரிக்காவில் பரவும் வினோத நோய்
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment