நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

2021 புத்தாண்டு அன்றே கோடீஸ்வரரான அதிர்ஷ்டசாலி!

கடந்த ஆண்டை கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஆக்கிரமித்துவிட்டது, இந்த புத்தாண்டிலாவது ஏதாவது நல்லது நடக்க வேண்டுமென்று நினைக்காதவர்கள் கிட்டத்தட்ட யாருமே இருக்கமாட்டார்கள்.

ஆனால், பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு அந்த எண்ணம் புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதியே நிறைவேறியுள்ளது.

ஆம், ஒன்பது ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் பங்குபெறும் லாட்டரி சீட்டு குலுக்கலில் பிரிட்டனை சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 40 மில்லியன் பவுண்ட், அதாவது இலங்கை பெறுமதியில் சுமார் 1000 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது.

இதுவரை தனது பெயர், இடம் குறித்த தகவலை பொதுவெளியில் வெளியிடுவதற்கு விருப்பம் தெரிவிக்காத அந்த புதிய மில்லியனர், வேண்டுமென்றால் இதே நிலையை தொடரவும் அனுமதியுண்டு.


கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற குலுக்கலில் ஜாக்பாட்டை வென்றுள்ள நபரின் லாட்டரியில் உள்ள ஐந்து எண்களும், இரண்டு அதிர்ஷ்டசாலி நட்சத்திரங்களும் ஒத்தியிருந்ததாக யூரோமில்லியன்ஸ் என்ற லாட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பிரிட்டனின் தேசிய லாட்டரி அமைப்பின் ஆலோசகரான ஆண்டி கார்ட்டர், “பிரிட்டனின் யூரோமில்லியன்ஸ் ஆட்டக்காரர்களுக்கு 2021ஆம் ஆண்டு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய் ஜாக்பாட் கிடைத்துள்ள நபர் பரிசை பெறுவதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்று கூறினார்.

எனினும், பிரிட்டனின் வரலாற்றில் ஒரு தனிநபரால் வெல்லப்பட்ட அதிகபட்ச ஜாக்பாட் இதுவல்ல. 2019ஆம் ஆண்டு அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு ஒரே ஜாக்பாட்டில் சுமார் இந்திய மதிப்பில் 1,700 கோடி ரூபாய் கிடைத்திருந்தது. அதேபோன்று, கடந்த ஆண்டு மற்றொரு நபருக்கு இந்திய மதிப்பில் 570 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய் பரிசை வென்றுள்ள பிரிட்டனை சேர்ந்த அதிர்ஷ்டசாலி, பரிசுத்தொகையை பெறும்பட்சத்தில் அந்த நாட்டின் சில பணக்காரர்களின் சொத்து மதிப்பையே அவர் பின்னுக்குத்தள்ளக் கூடும் என்று அந்த நாட்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!