நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: கால்பந்து வீரர்கள் உள்பட 5 பேர் பலி.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
பால்மஸ்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் சிறிய ரக  விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில்  பால்மஸ் கிளப் கால்பந்து அணியின் பயிற்சியாளர் உள்பட கால்பந்து வீரர்கள் 4 பேர் பலியாகினர். விமானியும் உயிரிழந்தார்.

 பால்மஸ் நகரில் இருந்து  கோயானியா நகருக்கு புறப்பட்ட  விமானம்,  ஓடுபாதையில் இருந்து மேலே செல்லும் போது  விபத்தில் சிக்கியதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் சிக்கிய விமானம் எந்த வகையை சேர்ந்தது என்பது குறித்து கால்பந்து அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!