நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அடடா ஆச்சரியம் - தங்கத்தால் ஆன பி.எஸ்., 5

 


ரஷ்யாவை சேர்ந்த, 'கேவியார்' பிராண்டு, அதன் விலைமதிப்பு மிக்க வடிவமைப்புகளுக்காக பெயர் பெற்றது. அந்த வகையில், தற்போது, 'சோனி பிளே ஸ்டேஷன் 5' சாதனத்தை, தங்கம் மற்றும் முதலை தோல் கொண்டு வடிவமைத்திருக்கிறது.

இதற்காக, 20 கிலோ சுத்த தங்கத்தைப் பயன்படுத்தி உள்ளது. மொத்தத்தில், தங்கத்தையும் சேர்த்து, மிகுந்த விலை மதிப்பு கொண்ட, 30 கிலோ உலோகத்தால் இந்த பிளே ஸ்டேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிளே ஸ்டேஷனின், கேம்பேட்ஸும் தங்கம் மற்றும் முதலை தோல் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

விலை?

சாதாரண பிளே ஸ்டேஷன் விலையே, கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் ஆகிறது. தங்கத்தால் ஆன பிளே ஸ்டேஷன் விலையை கேட்காமல் இருப்பதே நல்லது!


ALSO READ :  Jack Ma: சாதாரண ஆசிரியராகத் தொடங்கி நம்பர் 1 பணக்காரர் ஆன ஜாக் மா: சீன அரசுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை?

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!