நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டம் - ஹர்சவர்தன்

 


வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவருகிற கொரோனாவின் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையில், நமது நாடு சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆனாலும் கடந்த ஓராண்டு காலமாக நமது நாடு கொரோனா வைரசுக்கு எதிராக தீரமுடன் வெற்றிகரமாக போராடிக்கொண்டிருக்கிறது. வளர்ந்த நாடுகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, கொரோனா மீட்பில் உலகளவில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதே அதற்கு சான்று பகர்கிறது.
தற்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டம், முக்கிய கட்டத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்டமாக தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து, அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை சூடுபிடித்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

தடுப்பூசி பணியை குறையேதும் இன்றி சரியாக செய்து முடிப்பதற்கு வசதியாக,  தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 719 மாவட்டங்களில் 285 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

மகாராஷ்டிரம், கேரளம், குஜராத் மாநிலங்களில் தலா 4 மாவட்டங்களிலும், கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் தலா 5 மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் 7 மாவட்டங்களிலும் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


இந்நிலையில், மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேர்தல் வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது .

இதுவரை, 719 மாவட்டங்களில் 57 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 96 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் முதல் கட்டமாக, ஒரு கோடி மருத்துவப் பணியாளா்கள், 2 கோடி முன்கள பணியாளா்கள் என மொத்தம் 3 கோடி பேர்களுக்கு இலவச தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், இரண்டாம் கட்டமாக ஜூலை மாதத்திற்குள் 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் உள்ளிட்ட 27 கோடி முன்னுரிமை பயனாளர்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடுவது என்பது குறித்த விரிவான நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் தடுப்பூசி தொடர்பான தவறான வழிகாட்டுதல்களையும் வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம் எனவும் பதிவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!