நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா நோயாளிகளின் உடலில் தொற்று காலத்தை குறைத்தால் புதிய பாதிப்புகளை தவிர்க்கலாம் - ஆய்வில் கண்டுபிடிப்பு

 


கொரோனா நோயாளிகளின் உடலில் தொற்று பாதிப்பு காலத்தை அரை நாள் குறைத்தால் கூட பல லட்சம் புதிய பாதிப்புகளை தவிர்க்கலாம் என்று அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள பொது சுகாதார கல்வி நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். கொரோனா நோயாளிகளின் உடலில் தொற்று பாதிப்பு காலத்தை குறைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று ஆய்வில் ஈடுபட்டனர்.

இதற்கென ஒரு கணக்கீட்டு முறையை உருவாக்கினர். அதன்படி, கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒரு பங்கு பேருக்கு சிகிச்சை அளித்து, அவர்களின் உடலில் தொற்று காலத்தை அரை நாள் குறைத்தால் கூட 14 லட்சம் புதிய பாதிப்புகளையும், 99 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவதையும் தவிர்க்கலாம் என்று கணக்கிட்டனர்.

தொற்று காலத்தை 3½ நாள் குறைத்தால், 74 லட்சம் புதிய பாதிப்புகளை தவிர்க்கலாம். நான்கில் 3 பங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால், சுமார் 3 கோடி புதிய பாதிப்புகளை தவிர்க்கலாம். 85 ஆயிரத்து 600 கோடி டாலர் மருத்துவ செலவுகளை மிச்சப்படுத்த முடியும் என்றும் கணக்கிட்டுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு, தொற்று காலத்தை குறைக்கக்கூடிய தடுப்பூசிகளை உருவாக்க உதவும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்ட புரூஸ்லி தெரிவித்தார். கொரோனாவை தடுக்க முடியாத, குணப்படுத்த முடியாத தடுப்பூசியாக இருந்தாலும், தொற்று காலத்தை குறைக்கும் என்று அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!