நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்... புற்றுநோய் அபாயம்!- முழு தகவலுடன் எச்சரிக்கும் அரசு மருத்துவர்

 

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் மத்திய, மாநில அரசுகளால் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை உண்டால் புற்றுநோய், உடல் உபாதைகள் உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது என எச்சரிக்கிறார் அரசு பொதுநல மருத்துவரான ஃபரூக் அப்துல்லா.

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் ஏன் ஆபத்தானவை? எதற்காக அவை தடை செய்யப்பட்டன? இந்த மீன்களை உண்டால் என்ன ஆகும்? - இதுகுறித்து விரிவாக விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

''தமிழகம், கேரளம் முதலான மாநிலங்களில் இந்த வகை மீன்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. ஆனால் இவை இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டு விட்டன. ஆப்பிரிக்க கெளுத்தி மீனின் விலங்கியல் பெயர் ‘Clarias Gariepinus ஆகும். இந்த வகை மீன்கள் ‘ஏலியன்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை உள்ளூர் நீர்நிலைகளில் கலந்து நதிகள், குளம் குட்டைகளில் வியாபித்து தற்போது நமது மாநிலத்தில் இருக்கும் உள்ளூர் மீன் வகைகளை கொன்றொழித்து விடுகின்றன.  


இந்த வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள், தான் வாழ்வதற்காக பிற மீன்களை கொன்று திண்ணும் தன்மை கொண்டவை. மேலும் மீன்கள் கிடைக்காவிட்டால், பாசி போன்ற நீர்நிலைகளில் இருக்கும் தாவரங்களை உண்டும் பிழைக்கும். எனவே இவை carnivorous மற்றும் omnivorous ஆக மாறும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன

பல நேரங்களில் தன் இனத்தையே வேட்டையாடி உண்ணும் முறையையும் கடைபிடிக்கின்றன. இதுபோன்று தான் வாழ பிற மீன்களையும் தன் இன மீன்களையும் கொல்லும் மீன்கள் நமது நீர்நிலைகளில் இல்லை.


ALSO READ:   உலக நன்மைக்காக ...அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் டும்... டும்... டும்... விருந்து வைத்து கொண்டாடிய கிராம மக்கள்.!

அடுத்து, இவ்வகை கெளுத்தி மீன் ஒரு சீசனுக்கு நான்கு லட்சம் முட்டைகள் போடும். ஆனால், நம் நீர்நிலைகளில் உள்ள கெளுத்தி வெறும் 7,000 முதல் 15,000 முட்டைகளை மட்டுமே போடுகின்றன. மேலும், இவ்வகை மீன்கள் குறைவான ஆழத்தில் சேற்றில் கூட வளரும் தன்மை கொண்டவை. ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும் தண்ணீரில் கூட பல நாள்கள் உயிர் வாழும். வறண்டு போன நிலத்தில் கூட காற்றைக் குடித்து உயிர் வாழும் தன்மை கொண்டது. சாக்கடையில் கூட வாழும் தன்மை இதற்கு உண்டு.

இத்தகைய பல அசாதாரண விஷயங்கள் இதற்கு இருப்பதால் இயற்கையாகவே பிற வகை மீன்களை கொன்றொழித்து இவை மட்டும் அதிகம் வளர்ந்து நமது நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும். தற்போது கேரளா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் வண்டிப் பெரியார் அணையில் இந்த வகை மீன்கள் அதிகம் காணப்படுகின்றன.

இது நமது நீர்நிலைகளில் உள்ள மீன்களை அழித்து, இன்னும் சில ஆண்டுகளில் நமது உள்ளூர் நீர் நிலையில் கிடைக்கும் மீன்களின் வரத்தை முற்றிலுமாக ஒழித்துவிடும். இது ஒருபுறம் இருக்க, இந்த வகை மீன்கள் தண்ணீரில் இருக்கும் உலோகங்களை தன்னகத்தே சேமித்து வைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. தண்ணீர், உலோகங்களால் மாசுபடுவதை அறிவதற்காக இந்த வகை மீன்கள்தான் பரிசோதனை விலங்குகளாக உபயோகிக்கப்படுகின்றன.


ALSO READ:  ஆசியாவின் பெரும்பணக்காரர் ஆனார் தண்ணீர் பாட்டில் நிறுவன அதிபர் சோங் சான்சன்..!


பொதுவாக நமது நாட்டில் நீர்நிலைகளின் மாசுத்தன்மை நாம் அறிந்ததே. அவற்றில் பல்வேறு தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகின்றன என்பதும் அறிந்தவையே. எனவே, இவ்வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்புபோன்ற உலோகங்கள் மிக அதிகமான அளவில் அபாயகரமான அளவில் இருக்கின்றன. இவற்றை உண்ணும் நமக்கு உலோகங்கள் ரத்தத்தில் சேர்ந்து அதனால் புற்றுநோய் / உடல் உபாதைகள் உருவாகும் ஆபத்து அதிகமாகிறது.

இனி ரத்தத்தில் உலோகங்கள் அதிகமாக இருக்கும் நோயர்களைக் கண்டால் இந்த வகை மீன்களை உண்பார்களா என்று கேட்க வேண்டும். இத்தனை ரிஸ்க்குகள் இருக்கும் இந்த வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை 'சீக்கிரம் வளர்கிறது; நல்ல விலைக்கு விற்கிறது' என்ற காரணத்திற்காக மக்கள் குட்டைகளில் வளர்க்கிறார்கள். இது தவறானது.

மேலும், இந்த வகை மீன்களை விற்பதும் வாங்குவதும் நமது ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் செயலாக அமையலாம். வேறு மீன்கள் ஏதும் இல்லாமல், இந்த வகை மீன்கள் மட்டும்தான் ஓர் இடத்தில் கிடைக்கின்றன என்றால், புரதச்சத்து எடுக்கும் நோக்கில் இவற்றை நன்றாக அவித்து உண்பது இவற்றில் இருக்கும் உலோகங்களை பெரும்பான்மை நீக்கி விடுகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன’’ என்கிறார் ஃபரூக் அப்துல்லா.


ALSO READ:  உயிரை துச்சமாக எண்ணிய ஆட்டோ டிரைவர்... பைக் ஓட்டி வந்தவரை இடித்து கீழே தள்ளி விட்டு தப்பி ஓட்டம் (வீடியோ)

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!