நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ‘மில்க் பிக்கீஸ்’ - மீண்டும் தமிழகத்தில் அறிமுகம்

 ‘மில்க் பிக்கீஸ்’ பிஸ்கெட்டை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோரின் பெரும் கோரிக்கையைத் தொடர்ந்து80 மற்றும் 90-களின் தலைமுறைக்குப் பிடித்தமான மில்க் பிக்கீஸ் கிளாசிக் மீண்டும் தொடங்கப்படும் என்று பிரிட்டானியா நிறுவனம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மார்க்கெட்டிங் துணைத்தலைவர் வினய் சுப்ரமணியம் கூறுகையில், “தமிழ்நாட்டின் நுகர்வோர்கள் சிறுவயதில் மில்க் பிக்கீஸ் சாப்பிட்டு வளர்ந்திருக்கிறார்கள். இது தமிழகத்துடன் மிகப்பெரிய உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கொண்ட ஒரு பிராண்ட். இந்த காலங்களில்நாம் கடந்த காலத்தை இன்னும் அதிகமாக விரும்புகிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோம். சமீபத்தில் நாங்கள் நடத்திய ஒரு இணைய பிரச்சாரத்தின்போது, தமிழகத்தை சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மீண்டும் ‘மில்க் பிக்கீஸை’  கொண்டுவரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்” எனத் தெரிவித்தார்


மில்க் பிக்கீஸ் கிளாசிக் பிஸ்கெட் தற்போது அதன் பழைய அசல் வடிவத்துடன் வெளிவருகிறது. பிரிட்டானியா என்ற எழுத்துகள் பிஸ்கட்டின் மையத்திலும், மலர் வடிவங்கள் பிஸ்கெட்டின் ஓரத்திலும் பொறிக்கப்பட்டுள்ளதுஅதேபோல அட்டையில் ழக்கமான பிஸ்கெட் பாட்டில் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பிஸ்கெட்கள் அதே பால் சுவையுடனும் இருக்கும் என்றும் பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 65 கிராம் எடையுடைய இந்த பிஸ்கெட் பேக் ரூ10 விலையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



also read : உலகின் மிகச்சிறந்த மாணவராக இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு: அமெரிக்க பல்கலை அறிவிப்பு

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!