நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் முன்னணி பணக்காரர் எலான் மஸ்க்… செலுத்தும் வரித்தொகை இத்தனை கோடியா? வாயைப் பிளந்த நெட்டிசன்கள்!

 எலான் மஸ்க்கின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், அவர் செலுத்துள்ள வரித்தொகை இத்தனை கோடிகளா? என அவரை கிண்டல் செய்த நெட்டிசன்கள் வாயைப் பிளந்துள்ளனர்.


லகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக வலம் வருபவர் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். ரூ. 2 லட்சத்து 11 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பை கொண்டுள்ள இவரை அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் மாத இதழ், இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக சமீபத்தில் தேர்வு செய்திருந்தது.

எனினும், சமூக வலைத்தளங்களில் இவருக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், இவருக்கு எதிராக ஒரு பிரிவினரும் எப்போதும் தங்கள் கருத்துக்களை பதிவிடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், தனது நிறுவனத்தில் இருந்து ஈட்டும் வருமானத்திற்கு எலான் மஸ்க் முறையாக வரி கட்டுவதில்லை என அவருக்கு எதிராக சில அரசியல் தலைவர்களும், மற்றும் சிலரும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


அவர்களின் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி தரும் விதமாக தற்போது எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் தான் இந்த வருடம் ரூ .83,000 கோடி வரி செலுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வரி தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு தனிநபர் செலுத்திய அதிகபட்ச வரியாக அது இருக்கும்.

எலான் மஸ்க் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில் அவர் செலுத்துள்ள வரித்தொகை இத்தனை கோடிகளா? என அவரை கிண்டல் செய்த நெட்டிசன்கள் வாயைப் பிளந்துள்ளனர்.


ALSO READ : நோபல் பரிசும்... பெண் சாதனையாளர்களும்...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்