நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெண்களே சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா? இதனை எப்படி போக்கலாம்?

 பொதுவாக பனிக்காலம் துவங்கி விட்டால் அதிக சரும பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். குறிப்பாக பனி காலத்தில் சருமம் ஈரப்பதத்தை இழந்து வறட்சியின் காரணமாக சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும்.


ந்த பிரச்சனையை எப்படி எதிர் கொள்வது என்னத்தான் பல செயற்கை பொருட்கள் இருந்தாலும் அது நிரந்த தீர்வினை தராது.

இதற்கு ஒரு சில இயற்கை பொருட்கள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.


  • வறட்சியான சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் சிறிது நேரம் தடவி, மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி தன்மை, மாறி சருமம் பொலிவுடன் வைத்துக்கொள்ள பெரிதும் கற்றாழை உதவுகிறது. 

  •  நன்றாக கனிந்த பப்பாளியை எடுத்து கொள்ளவும். அவற்றை நன்றாக மசித்து கொள்ளவும், இந்த மசித்த பப்பாளியை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் வரை காத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் சரும வறட்சி மாறி முகம் எப்போது ஜொலிப்பாகவே இருக்கும்.

  • ஒரு அவகோடா பழத்தை எடுத்து கொள்ளவும், அவற்றை நன்றாக அரைத்து இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் வரை காத்திருந்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் போதும் சருமத்தில் ஏற்படும் வறட்சியை கட்டுப்படுத்தி, சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும்.

  •  வெள்ளரிக்காயை அரைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து முகம் மற்றும் வறட்சி பகுதிகளில் தடவி 15 நிமிடம் வரை காத்திருக்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சரும வறட்சி பிரச்சனை சரியாகும்.

  •  சரும வறட்சியால் தினமும் பாதிக்கப்படுபவர்கள் வேப்பெண்ணெய்யை கைகால்கள் மற்றும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் சரும வறட்சி மாயமாக மறைந்து போய்விடும்.

  •    ஆலிவ் ஆயிலை மிதமான சூட்டில் சுடவைத்து, பின்பு அந்த எண்ணெயை உடல் மற்றும் உச்சந்தலையில் நன்றாக தடவி சிறிது நேரம் வரை காத்திருந்து, பின்பு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் குளித்து வரவும். இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் வறட்சியை விரட்டி அடிக்கலாம்.  




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்