நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடை குறைக்கும் கருஞ்சீரக சூரணம் .

உடல் எடை குறைக்கும் கருஞ்சீரக சூரணம் .

👉தேவையான மூல பொருட்கள்:

1.கருஞ்சீரகம் – 400 கிராம்
2.சீரகம் – 50 கிராம்
3.சுக்கு – 50 கிராம்
4.அரிசித்திப்பிலி – 50 கிராம்

👉செய்முறை

✍️கருஞ்சீரகத்தை நன்றாக கழுவி நிழலில் உலர்த்திக்கொள்ளவும். சுக்கை மேல் தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும்.

✍️அரிசித்திப்பிலியை இளம் சூட்டில் வறுத்து பிறகு அனைத்தையும் ஒன்று சேர்த்து இடித்து பொடி செய்து நன்றாக சலித்து வைத்துக்கொள்ளவும்.

👉சாப்பிடும் முறை

காலை உணவு சாப்பிட்ட உடன் 30 நிமிடம் கழித்து 1/2 ஸ்பூன் அளவு வெந்நீரில் சாப்பிடவும். இது போல் காலை இரவு என இரு வேளை சாப்பிடவும். தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வர உடல் பருமன் குறைந்து அழகான உடலை பெறலாம், மாதம் 2 முதல் 3 கிலோ குறையும்

விதிமுறைகள்:

1.அதிக நீர் குடிக்க வேண்டும் (5லி வரை) முடிந்தால் சுடுநீர்

2.இரவு நேர அசைவம் கூடாது,பண்ணை கோழி முட்டை,கறி அறவே கூடாது

3.குளிர்பானங்கள் கூடாது,அடிக்கடி ஹோட்டல் உணவு தவிர்க்கவும்

4.உடற்பயிற்சி ஏதேனும் ஒன்று தவறாது கடைபிடிக்கவும்

5.சரியான நேரம் தூக்கம் அவசியம்,மலச்சிக்கல் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!