நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சீனாவில் தானியங்கு கருவிகள் மூலம் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் கொரோனா வைரஸ்.

சீனாவில் தானியங்கு கருவிகள் மூலம் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் ஜின்செங், வடக்கு சீனாவின் ஷாங்க்சி மாகாணம் ஆகிய இடங்களில் இருந்து தானியங்கி கருவிகள் மூலம் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அதில் கொரோனா வைரஸ் இருப்பதை சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கடந்த சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 
இதனையடுத்து தொற்று உள்ள பொருட்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட யாருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, ஹெபே மாகாணத்தில் உள்ள காங்ஜோ, யந்தாய், சாண்டோங் மாகாணத்திலுள்ள லினி ஆகிய இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பாக்கெட்டுகளில், மூன்று பாக்கெட்டுகளில் கொரோனா வைரஸ் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!