நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

யப்பா.! வேற லெவல் ஸ்டெண்ட்ஸ் - மில்லியன் பேர் பார்த்த சிறுமியின் வைரல் வீடியோ!

சிறுமி ஒருவர் செய்த ஜிம்னாஸ்டிக் ஸ்டெண்ட்ஸ் ட்விட்டர் தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று ஒரு பழமொழி உள்ளது. அந்த பழமொழிக்கு ஏற்றவாறு சிறுமி ஒருவர் செய்யும் ஜிம்னாஸ்டிக் ஸ்டெண்ட்ஸ் நம்மை மிகவும் வியப்பு அடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஸ்டெண்ட் தொடர்பாக பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் மேக் ஹெசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரூனோ என்ற ஒருவர் பதிவிட்ட வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் தன்னுடைய உடம்பை வில்லாக வளைத்து செய்யும் ஸ்டெண்ட்ஸ் நம்மை வாய் அடைக்க வைக்கும் வகையில் உள்ளது. 


இந்த வீடியோவை தற்போது வரை 1.7 மில்லியன் பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் இதை பலரும் லைக் செய்து வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை பார்த்து பலரும் வியப்புடன் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சிலர் இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஒரு சிறுமிக்குள் இவ்வளவு திறமையா என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒருவர் இந்த சிறுமி வருங்காலத்தில் இவர் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளராக வருவார் என்று பதிவிட்டுள்ளார். 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்