நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..! காதலியை காரின் மேல் கட்டி வைத்து ஓட்டிச் சென்ற காதலன்

தனது காதலி இலோனாவை காரின் மேல் கயிறு கொண்டு கட்டி வைத்து கொண்டு ரோட்டில் கார் ஓட்டி சென்று உள்ளார்.. இருவரும் கைகளில் விலங்கு மாட்டி உள்ளனர்.
மாஸ்கோ

ரஷியாவைச் சேர்ந்த செர்ஜி கோசென்கோ இவர் சமூக ஊடக பிரபலம். தனது காதலியுடன் இணைந்து பலவேறு வித்தியாசமான் புகைப்படங்கள் , வீடியோக்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கம். இவர் சமீபத்தில் தனது காதலியுடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

குறிப்பாக, சமூக வலைத்தளத்தில் கிட்டதட்ட அவருக்கு 50 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர். இந்த வீடியோவை “Trust Test” என்று குறிப்பிட்டு, இந்த வீடியோவை தன்னுடைய சமூக ஊடகத்தின் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

தனது காதலி இலோனாவை காரின் மேல் கயிறு கொண்டு கட்டி வைத்து கொண்டு ரோட்டில் கார் ஓட்டி சென்று உள்ளார். இருவரும் கைகளில் விலங்கு மாட்டி உள்ளனர். 

இந்த வீடியோவானது, பலரது கவனத்தையும் பெற்றுள்ள நிலையில், பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

 ஒருவர் "உண்மையைச் சொல்வதானால், இதில் என்ன வேடிக்கை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எல்லோரும் அதை அனுபவித்து பார்க்கிறார்கள். இது உங்கள் சொந்த குழந்தைகளுக்கு நீங்கள் வைத்த முன்மாதிரியா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், இந்த வீடியோ அந்நாட்டின் போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. இந்த வீடியோவைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த நபரை கண்டுபிடித்து, சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு இந்திய மதிப்பில் ரூ. 760 அபராதம் விதித்தனர்.

முக்கியமாக, அந்நாட்டின் சிறுவர் சிறுமிகளுக்கு இந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும், அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!