நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சாப்பிட்ட பிறகு சோம்பு, பீடா சாப்பிடலாமா?

வெற்றிலை செரிமானத்துக்கு உதவும். ஆனால், வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்த்து எடுத்துக்கொண்டால் குடல் கேன்சர் உருவாகவும் வாய்ப்புண்டு.
சைவ உணவு சாப்பிடுகிறோமா, அசைவ உணவு சாப்பிடுகிறோமா என்பதை பொறுத்துதான் இவற்றை சாப்பிடலாமா என்பதை முடிவு செய்யவேண்டும். சாப்பிட்ட பிறகு வயிற்றில் சுரக்கும் அமிலங்களை கட்டுப்படுத்த வாழைப்பழம், பால், ஐஸ்க்ரீம், மில்க் ஷேக் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. பழங்கள் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். விருந்துகளில் அசைவ உணவுகளை ஒரு கை பார்ப்பவர்களுக்கும் இது நன்மை பயக்கும்.

வெற்றிலை செரிமானத்துக்கு உதவும். ஆனால், வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்த்து எடுத்துக்கொண்டால் குடல் கேன்சர் உருவாகவும் வாய்ப்புண்டு. இனிப்பு பீடா எடுத்துக்கொள்வது நல்லதுதான். பீடாவினுள் வைக்கப்பட்டு இருப்பது உலர வைத்த பப்பாளிதான். பீடாவுடன் பாக்கு சேர்க்காமல் சாப்பிடுவதே நல்லது.

எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, அதில் நார்ச்சத்து இருக்காது. இவ்வகை உணவுகள் மலச்சிக்கலை உருவாக்கிவிடும். பழங்களை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம். சோம்பு என்றழைக்கப்படும் பெருஞ்சீரகமும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். சாப்பிட்ட பிறகு சிலர் காபி குடிப்பார்கள். இது பசியைத் தூண்டும் அமிலங்களை சுரக்கச் செய்யும்.

மீண்டும் சாப்பிடத் தூண்டும். சாப்பிட்ட உடன் காபி, டீ குடிக்காமல் இருப்பது நல்லது. ஜல்ஜீரா சோடா, எலுமிச்சைச் சாறு போன்றவை பசியைத் தூண்டும். ஆனால், இவற்றை சாப்பிட்ட பிறகு எடுத்துக் கொண்டால் எதிர்விளைவுகளை உருவாக்கிவிடும்.

விருந்துகளுக்கு போனால் எல்லாவிதமான உணவுகளையும் ருசிக்கலாம்தான். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளை உருவாக்கி உடல்நலத்தையும் கெடுக்கும். அதனால் எவ்வளவு சுவையான, பிடித்தமான உணவாக இருந்தாலும் அளவாக சாப்பிடுவதே நல்லது...



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!