நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சூடான தண்ணீரில் உப்பு கலந்து குளிப்பதால் இத்தனை நன்மைகளா? இதுநாள் வரை தெரியாமல் போச்சே!

 பொதுவாக நாம் உப்பை சமையலில் சேர்த்து கொள்வது வழக்கம். ஆனால் நாம் குளிக்கும் தண்ணீரில் உப்பைக் கலந்து குளிப்பதால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம்.


 பொதுவாக கடல் உப்பு என்பது சமையலுக்கு ஏற்ப தயாரிக்கப்படுவதால் இதில் தாதுக்கள் மிக குறைவு. ஆனால் நாம் குளிப்பதற்கு என்றே தனி உப்பு உள்ளது.

அதனை நாம் பயன்படுத்தி வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். உப்பை தண்ணீரில் கலந்து குளிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தெளிவாக பார்க்கலாம்..

  • குளிக்கும் தண்ணீரில் நீங்கள் உப்பை நான்கு முதல் பத்து கப் வரை சேர்க்கலாம். சாதாரண நீர்த்தொட்டியில் கால் கப் கடல் உப்பு சேர்க்கலாம். குறைந்தது இந்த உப்பு 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வேண்டும்.

  • நீங்கள் குளிக்கும் இந்த தண்ணீரானது உங்கள் உடலின் வெப்பநிலையிலிருந்து இரண்டு டிகிரி அதிகமான வெப்பநிலையில் இருக்க வேண்டும். இப்படி நீங்கள் குளித்து வந்தால் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.

  • அதோடு தசைகள் இலகுவாகி உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் உடல் வலி, தசை வலி இருந்தாலும் சரியாகும். உடல் அசதி போன்றவை இருக்கும் நேரத்தில் இந்த கடல் உப்பு குளியல் நல்ல பலனை தரும்.


சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற ஏதாவது பிரச்னை வந்தால் தவிர்த்து விடுங்கள். அதேபோல் உடலில் காயம், சிரங்கு, பரு , தேமல் போன்ற சரும பாதிப்புகள் இருந்தால் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த குளியலை நீங்கள் செய்யும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்