நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தேவையற்ற ரோமத்தை நிரந்தரமாக நீக்கும் லேசர் சிகிச்சை

பெண்களுக்கு முகத்தில் வளரக்கூடிய தேவையற்ற ரோமத்தை நிரந்தரமாக லேசர் சிகிச்சை முறைபடி எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் எந்தவிதமான பக்க விளைவும் கிடையாது.
தோல் மருத்துவ முறையின் பல நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் நிரந்தரமாக முடி வளர வைப்பதற்கு FUE (Follicular Unit Extraction) என்ற முறையில் தழும்புகள் இல்லாமல் மயக்க மருந்து இல்லாமல் எளிய முறையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். இந்த முறையில் வளரக்கூடிய முடியும் அதன் அமைப்பும் இயற்கையான தோற்றம் அளிக்கும்.

காண்பவருக்கு எந்த விதமான வித்தியாசமும் தெரியாமல், உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத எளிமையான அறுவை சிகிச்சை முறையாகும். இந்த அறுவை சிகிச்சை OP (புறநோயாளி) சிகிச்சை முறையில் செய்து கொள்ளலாம். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. இந்த அறுவை சிகிச்சைக்கு எந்த விதமான பக்க விளைவும் கிடையாது. இந்த முறையில் வளரக்கூடிய முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இது ஆண் பெண் இருபாலருக்கும் செய்யலாம். இது சிலருக்கு முகத்தில் வளரக்கூடிய தாடியின் அமைப்பு முறையையும் சரி செய்யலாம்.

லேசர் முடிநீக்கம்:

பெண்களுக்கு முகத்தில் வளரக்கூடிய தேவையற்ற ரோமத்தை நிரந்தரமாக லேசர் சிகிச்சை முறைபடி எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் எந்தவிதமான பக்க விளைவும் கிடையாது.

இந்த சிகிச்சை முறை 4 முதல் 6 முறை மாதம் ஒரு முறை எடுத்துக்கொள் ளலாம். இது நிரந்தரமாக முடிநீக்கும் முறையாகும். இது ஆண் பெண் இரு பாலருக்கும் செய்யகூடிய சிகிச்சையாகும். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறைகள் முகத்தில் மற்றும் உடம்பில் இருக்க கூடிய தேவையற்ற முடிகளை எடுக்க உதவும். இந்த லேசர் முடிநீக்கம் முறையில் வலி மற்றும் பக்க விளைவுகள் எதுவும் கிடை யாது. இந்த சிகிச்சை முறை எல்லா வயதினருக்கும் ஏற்றது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!