நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் பெண்: அமெரிக்க நடிகை சாதனை.......

அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், மாடலுமான க்ய்லை ஜெனர் (Kylie Jenner) இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.


 மொத்தம் 300 மில்லியன் ஃபாலோயர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த மைல்கல்லின் மூலம் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை பெற்ற பெண்ணாகி உள்ளார் அவர்.  


பாப் இசை உலகின் நட்சத்திர பாடகி Ariana Grande-வை பின்னுக்கு தள்ளியுள்ளார் 24 வயதான ஜெனர். இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நபராக கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர் ரொனால்டோ உள்ளார். அவரை 388 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். 

தற்போது தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துள்ள க்ய்லை ஜெனர் கடந்த சில மாதங்களாக சமூக வலைதள பக்கங்களில் இருந்து விலகியிருந்தார். ஜனவரி பிறந்து 13 நாட்கள் கடந்துள்ள சூழலில் இரண்டு பதிவுகளை மட்டும்தான் இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ளார். 


கடந்த 2018-இல் தன் முதல் குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்தார் க்ய்லை ஜெனர். அந்த புகைப்படம் 18 மில்லியனுக்கும் அதிகமானோரால் லைக் செய்யப்பட்டது. அதோடு இன்ஸ்டாவில் அதிக லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையையும் அது படைத்தது. இருப்பினும் ஒரு முட்டையின் புகைப்படம் அந்த சாதனையை தகர்த்தது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!