பொதுவாக பழங்கள் நம்முடைய உடலுக்கும் சருமத்துக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் வாரி வழங்குகின்றது. அதனால் தான் நம்முடைய உணவில் பொதுவாக பழங்கள் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதற்காக பரிந்துரை செய்யப்படுகிறது.
அதிலும் பழங்களை சாப்பிடுவதனால் எவ்வளவு நன்மைகள் நமக்கு உருவாகின்றதோ அதே அளவுக்கு மட்டுமல்ல, அதைவிட அதிகமான சத்துக்கள் பழங்களின் தோல்களில் உண்டு. நாம் வேண்டாம் என்று தூக்கி ஏறியும் பழத்தோல் சருமத்துக்கும் தலைமுடிக்கும் நிறைந்த நன்மைகளைத் தரும். பல நன்மைகள் தருகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- வாழைப்பழத் தோலை வைத்து, 5 நிமிடங்கள் வரை, தேய்க்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அதைக் கழுவிவிட வேண்டும். ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து, இதைச் செய்து வந்தால் விரைவிலேயே அடிபட்ட காயங்கள், தழும்புகள் மறையும்.
- வெயிலில் எலுமிச்சைத் தோலை நன்கு உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு அதை உங்களுடைய பேஸ் பேக்குகளிலோ அல்லது குளிக்கும்போதோ பயன்படுத்திக் கொள்ளுங்கள். எலுமிச்சைத் தோலில் அதிக அளவில் அமிலம் இருப்பதால் சருமத்துக்குக் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் முகத்தில் இதை நேரடியாகப் பயன்படுத்தும் முன், முகத்தின் ஏதேனும் ஒரு ஓரத்தில், தடவி பரிசோதனை செய்து பாருங்கள். அதனால் பாலில் கலந்து தேய்த்தால் சருமத்தில் உண்டாகும் எரிச்சல் சரியாகும்.
- ஆரஞ்சுப் பழத் தோலினை வெயிலில் உலர்த்தி, அதைப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, அந்த தோலை வெறுமனே சருமத்தில் அப்படியே வைத்துத் தேய்த்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆரஞ்சுத் தோல் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். ஆரஞ்சு தோலுக்குள் இருக்கும் பிளீச்சிங் ஏஜெண்ட் உங்களுடைய முகத்தை பளிச்சென பொலிவுடன் காட்டும் தன்மை கொண்டது.
- பப்பாளியின் தோலின் உள்பக்கத்தை முகத்தில் நேரடியாக அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டுவிடுங்கள். பின் அதை சுத்தம் செய்தால் போதும். சரும வறட்சி நீங்கி, பளபளப்பும் நிறப்பொலிவும் அதிகரிக்கும். பிறகு என்ன நீங்கள் அப்படி ஜொலிப்பீர்கள்.
- தர்பூசணி தோல் சருமத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கும் தன்மை கொண்டது. சருமத்தின் உள்புறம் வரைக்கும் ஊருவிச் சென்று சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.
Comments
Post a Comment