முடி அதிகமாக கொட்டுதா? ஈஸியா திரும்ப பெற அரிசி தண்ணீரை இப்படி பயன்படுத்துங்க!
- Get link
- X
- Other Apps
இன்றைய தலைமுறையினர்களுக்கு உணவு முறை மாற்றம் மற்றும் மாசு, தூசு போன்ற பிரச்சனைகளால் தலைமுடி உதிர்வு என்பது வேகமாக நிகழ்ந்து வருகிறது.
ஆனால் இதனால் தோல் சம்மந்தமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் என்பதை பற்றி இதில் பார்ப்போம்....
முதலில் எப்போதும் ஈரத் தலையுடன் இருக்கும் பொழுது தலைமுடியை வாரக்கூடாது. இதனால் தலைமுடியின் வலிமை குறைந்து விட வாய்ப்புகள் உண்டு. ஈரத் தலையுடன் கட்டிக் கொண்டு அப்படியே வேலைகளை செய்யக்கூடாது. நன்கு காய வைத்த பின்பு தான் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.
இப்படி அதிகமாக உதிரும் தலை முடி பிரச்சனைக்கு நீங்கள் தினமும் சாப்பாடு செய்யும் பொழுது அரிசியை ஊற வைப்பீர்கள் அல்லவா, அதை ஓரிரு முறை நன்கு அரிசியை கழுவிய பின்பு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள்.
அரை மணி நேரம் கழித்து அந்த அரிசியை நீங்கள் சாப்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமிருக்கும் அந்த அரிசி கழுவிய தண்ணீரை ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடைத்து வைத்த தண்ணீரை சுமார் இருபத்தி நான்கு மணி நேரம் அப்படியே புளிக்க வைத்து விடுங்கள்.
இதனையடுத்து, 24 மணி நேரம் கழித்து நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து இருக்கும். இந்த பாக்டீரியாக்கள் முடியின் வேர்க்கால்களை தூண்ட செய்து சொட்டை தலையிலும் முடியை வளர வைக்க கூடிய சக்தியைப் பெறுகின்றது.
ஏற்கனவே சொட்டையாக இருக்கும் தலையில் இதனைப் பயன்படுத்துவதில் பிரயோசனமில்லை ஆனால் தலைமுடி அதிகமாக உதிர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் இது போல ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் பயன்படுத்துவதன் மூலம் நிச்சயம் பலனளிக்கும்.
மேலும், 2 ஸ்பூன் அரிசி கழுவிய இந்த தண்ணீரையும், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயையும் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.
இரண்டையும் கலந்து வேர் கால்களில் படும்படி மசாஜ் செய்த பின்பு 5 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். பின்னர் சாதாரணமாக ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள்.
இதைத்தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வாருங்கள், இழந்த முடியை எளிதாக மீட்டு விடலாம். இயற்கையான முறையில் எதை செய்தாலும் நமது முடிக்கு நல்ல பலனை அளிக்கும்.
ALSO READ : குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தடவுவதன் நன்மைகள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment