நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மர்மமான விண்வெளி பொருள் அனுப்பும் சிக்னலால் விஞ்ஞானிகள் குழப்பம்!

 விண்வெளியில் இருந்து ரேடியோ சிக்னல் அளிக்கும் மர்மமான பொருள் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, வெள்ளை நட்சத்திரத்தின் எச்சமாகவோ அல்லது முற்றிலும் வேறுபட்டதாகவோ இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 


  • பூமியிலிருந்து 4000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது
  • மர்ம பொருள் அதிக அளவு ஆற்றலை வெளியிடுகிறது.
  • பூமியிலிருந்து எளிதில் பார்க்கக்கூடிய வகையிலான பிரகாசமான ரேடியோ அலையாக தோன்றுகிறது


விண்வெளியில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வரும் விஞ்ஞானிகள், ஒரு விஷயம் ஆச்சரியமடைந்துள்ளனர். பூமியில் இருந்து 4000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள விண்வெளியில் இருந்து மர்மப் பொருளில் மூலம் கிடைக்கும் சக்திவாய்ந்த ரேடியோ சிக்னல்தான் அவர்களின் ஆச்சரியத்திற்கு மட்டுமல்ல குழப்பத்திற்கும் ஆன காரணம். விஞ்ஞானிகளுக்கு ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் சிக்னல் கிடைக்கிறது. இது போன்ற ரேடியோ சிக்னல்களை இதுவரை பெறவோ,  உணர்ந்ததோ இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே, எதன் காரணமாக இது நடக்கிறது என்பதை துல்லியமாக மதிப்பிடுவது அவர்களுக்கு மிக கடினமாக உள்ளது.

சக்தி வாய்ந்த காந்தப்புலம் 

'டெய்லி மெயில்' பத்திரிக்கையில் வெளியான செய்தியில், இது ஒரு நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் அல்லது வெள்ளை நட்சத்திரத்தின் எச்சமாக இருக்கலாம், அதன் காந்தப்புலம் மிகவும் வலுவானதாக இருக்கலாம் அல்லது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் பலவாறு கூறுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விண்வெளிப் பொருள் ஒரு மணி நேரத்திற்கு மூன்று முறை ரேடியோ சிக்னல்கள் அல்லது ஆற்றலை வெளியிடுகிறது.

லைட் ஹவுஸ்  போல் தோற்றம்

ம்ர்ம பொருள் ஒரு ரேடியோ சிக்னலை வெளியிடும் போது, ​​அந்த நேரத்தில் அது பூமியிலிருந்து எளிதில் பார்க்கக்கூடிய வகையிலான பிரகாசமான ரேடியோ அலை போல் தோன்றுகிறது என்று கூறப்படுகிறது. இது ஒரு வகையான லைட் ஹவுஸ் போல்  தோன்றுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த பொருள் அலைகளுடன் சேர்ந்து அதிக அளவு ஆற்றலை வெளியிடுகிறது என்பதும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய விஞ்ஞானி டாக்டர். நடாஷா ஹர்லி வாக்கர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த மர்மமான பொருளைக் கண்டுபிடித்துள்ளது.

மர்ம பொருளின் பற்றிய தகவல்

பிரபஞ்சத்தில் இருக்கும் ரேடியோ அலைகளின் வரைபடத்தை நடாஷா குழுவினர் தயாரித்துக்கொண்டிருந்த போது தான், இந்த மர்மப் பொருளைப் பற்றி அவர்களுக்குத் தெரிய வந்தது. அவர் கூறுகையில், 'எங்கள் கண்காணிப்பின் போது, ​​இந்த பொருள் சில நேரங்களில் தோன்றி பின்னர் மறைந்துவிடும். இது முற்றிலும் எதிர்பாராத  சம்பவம். ஒரு விதத்தில் மிகவும் திகிலை ஊட்டுவதாகவும் இருக்கிறது, ஏனென்றால் இது இதுவரை விண்வெளியில் இது போல் பார்த்ததில்லை. இந்த பொருள் நமது பூமியிலிருந்து 4000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று மருத்துவர் நடாஷா கூறினார். இது நமது விண்மீனுக்குப் பின்னால் உள்ளது என்கின்றனர்.

மிக பிரகாசமான தோற்றம் 

இந்த பொருள் 'அல்ட்ரா லாங் பீரியட் மேக்னடர்' உடன் ஒத்துப்போகிறது என்றார். இது இவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த பொருள் காந்த ஆற்றலை, ரேடியோ அலைகளாக மிகவும் பயனுள்ள முறையில் மாற்றுகிறது, இது வேறு எந்த பொருளிலும் காணப்படாத அம்சம். இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


ALSO READ : விண்வெளி வீரர்களின் சாப்பாட்டுக்கு ஐடியா கொடுத்தா ரூ.7.4 கோடி பரிசு! நாசாவின் அசத்தல் அறிவிப்பு;

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!