கின்னஸ் சாதனை படைத்து 465 நாள் இருந்த குமிழி! விஞ்ஞானக் குமிழி..........
- Get link
- X
- Other Apps
குமிழிகள் என்பது நொடிக் கணக்கில் மட்டுமே இருக்கக்கூடியவை. குமிழி ஒன்று, நீண்டநாள் இருப்பதற்கான காரணம் என்ன? தெரிந்துக் கொள்ளுங்கள்...
- உலகிலேயே அதிக காலம் இருக்கு குமிழி
- சிறப்பு வகை குமிழி
- கின்னஸ் பதிவு செய்த குமிழி.
லண்டன்:
விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான குமிழியை உருவாக்கியுள்ளனர், இது 465 நாட்கள் வெடிககாமல் இருந்து சாதனை படைத்த குமிழி இது.
குமிழிகள் என்பது நொடிக் கணக்கில் மட்டுமே இருக்கக்கூடியவை. குமிழி ஒன்று, நீண்டநாள் இருந்ததற்கான காரணம் என்ன? தெரிந்துக் கொள்ளுங்கள்.
'கேஸ் மார்பிள்' என்ற சிறப்பு வகை குமிழியை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்த நீண்டக் குமிழியும் இடம் பெற்றுள்ளது. லில்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மிக நீண்ட காலம் நீடிக்கும் குமிழியை உருவாக்கியுள்ளனர். இந்த குமிழி 465 நாட்களுக்கு அதன் வடிவத்தை தக்க வைத்துக் கொண்டு சாதனை படைத்துள்ளது.
பொதுவாக, தண்ணீர் அல்லது சோப்பினால் உருவாகும் குமிழிகள் சில நொடிகளில் வெடித்துவிடும்.
வழக்கத்தைவிட 200,000 மடங்கு நீடிக்கும் குமிழி
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த புதிய கண்டுபிடிப்பான குமிழி, வழக்கமான சோப்பு குமிழியை விட 200,000 மடங்கு நீளமான வடிவத்தை கொண்டுள்ளது.
குமிழி வெடிக்காமல் இருப்பதன் ரகசியம் என்ன?
இது காற்றோட்டமான ஒரு ஷெல் அமைப்பு, பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், மேற்பரப்பில் இருக்கும் பிளாஸ்டிக் மணிகள் அதை வலிமையாக்குகின்றன.
பிரான்சில் உள்ள லில்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியலாளர் அய்மெரிக் ரூக்ஸ் தலைமையிலான குழு, இந்த விஞ்ஞானக் குமிழியை உருவாக்கில் இந்த ஆய்வை நடத்தியது.
முழு பரிசோதனை
'சோப்பு குமிழ்கள் அவற்றின் கலவை மற்றும் சூழலைப் பொறுத்தே எத்தனைக் காலம் நீடிக்கும் என்பது அடிப்படையான விஷயம். புவியீர்ப்பு தூண்டப்பட்ட வடிகால் மற்றும்/அல்லது திரவத்தின் ஆவியாதல் மூலம் குமிழி வெடிப்புகள் தூண்டப்படுகின்றன. அதிக அழுத்தத்தால் தூண்டப்பட்ட வெளிப்புற வளிமண்டலத்தில் உள் வாயு விரிவடைவதால் அவை சுருங்கக்கூடும்.
'இந்த விளைவுகள் அனைத்தையும் நடுநிலையாக்கி, நிலையான சூழலில் ஒரு வருடத்திற்கும் மேலாக அவற்றின் ஒருமைப்பாட்டை பராமரிக்கும் திறன் கொண்ட ஒரு கூட்டு திரவத்தால் செய்யப்பட்ட குமிழ்களை வடிவமைத்துள்ளோம்' என்றும், இது வாயு பளிங்கு (Gas Marble) சிறிய பிளாஸ்டிக் மணிகளைக் கொண்ட திரவக் கரைசலில் செய்யப்பட்ட ஒரு அசாதாரண வகை குமிழி என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தக் குமிழி, உங்கள் கையில் பிடிக்கும் அளவுக்கு வலுவாக இருக்கும். இதை ஒரு இடத்தில் இருந்து உருட்டினாலும் உடையாது.
நீண்ட காலம் நீடிக்கும் குமிழிகளைக் கண்டுபிடிப்பதற்கான சோதனைகளில், குழு மூன்று வெவ்வேறு வகைகளை ஒப்பிட்டது - வழக்கமான சோப்பு குமிழ்கள், நீர் சார்ந்த வாயு பளிங்குகள் மற்றும் நீர் மற்றும் கிளிசரால் இரண்டின் கலவையிலிருந்து தயாரிக்கப்பட்ட குமிழ்கள்.
'கிரானுலர் ராஃப்ட்' (granular raft) என்று அழைக்கப்படும் ஒரு நீர் அல்லது நீர்-கிளிசரால் குளியல் மேற்பரப்பில் பிளாஸ்டிக் துகள்களை பரப்புவதன் மூலம் வாயு பளிங்குகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினார்கள்.
அதன் பிரகு, அதன் அடியில் காற்றை செலுத்தி ஒரு குமிழியை உருவாக்கினார்கள். இறுதியில் பளிங்கு மேற்பரப்பில் பூசுவதற்கு போதுமான பிளாஸ்டிக் மணிகளைக் கொண்டு இந்த அதிசயக் குமிழி உருவாக்கப்பட்டது. ஆய்வின் முழு கண்டுபிடிப்புகளும் ஃபிசிக்கல் ரிவியூ ஃப்ளூயிட்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
ALSO READ : 125 நாகப்பாம்புகளுக்கு இடையில் கிடந்த நபர்! அலறியடித்த பக்கத்துவீட்டினர்கள்; பகீர் சம்பவம்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment