நம்முடைய உண்மையான நிறம் முகம், கழுத்து மற்றும் கை, கால்களில் இருப்பதில்லை. வெயில் படும்படியான இடங்களில் ஒரு நிறமும் மற்ற வெயில் படாத இடங்களில் வேறு ஒரு நிறமும் தான் எல்லோருக்கும் இருக்கும். அடிக்கடி வெயிலில் சுற்றுபவர்களுக்கு இது தனித்தனியாக நன்றாகவே பார்த்தாலே தெரியும். குறைவாக வெயிலில் சுற்றுபவர்களுக்கு அவ்வளவாக தெரியாவிட்டாலும், நிற வேறுபாடு உன்னித்து கவனித்தால் கண்டிப்பாக புரியும். நம்முடைய உண்மையான நிறத்தை ரொம்பவே சுலபமாக 10 நிமிடத்தில் எப்படி பெறுவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
திடீரென ஒரு விசேஷம் அல்லது பார்ட்டி என்று வரும் பொழுது அந்த சமயத்தில் பெரிதாக நேரத்தை செலவிட்டு அல்லது பணத்தை செலவிட்டு நம் சருமத்தை பராமரிக்க முடியாமல் போய்விடுகிறது. அது போன்ற சமயத்தில் சட்டென பத்து நிமிடத்தில் இப்படி ஒரு டிப்ஸை பயன்படுத்தி பாருங்கள். இழந்த நிறத்தை மீட்டு விடலாம். இதற்கு நம் வீட்டில் இருக்கக் கூடிய இந்த நாலு பொருட்களுடன் ஓட்ஸ் மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. ஓட்ஸ் இல்லாதவர்கள் அதற்கு பதிலாக அரிசி மாவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதலில் சருமத்தின் நிறத்தை மெலனின் எனும் மூலக்கூறு தீர்மானிக்கிறது. இந்த மெலனின் எனும் மூலக்கூறினை தூண்டிவிடும் பொழுது அது இழந்த நிறத்தை நமக்கு கொடுக்கிறது. முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்க செய்து புத்துணர்வு அடைய செய்வதன் மூலம் இழந்த பொலிவை மீட்டெடுக்கலாம்.
இதற்கு முதலில் வேப்பிலை மற்றும் வெள்ளரிக்காயை எடுத்து கொள்ளுங்கள். கொஞ்சம் வேப்பிலை மற்றும் அதற்கு தகுந்த அளவிற்கு வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி உரலில் வைத்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். நைசாக இவற்றை அரைத்து எடுத்ததும் ஓட்ஸ் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஓட்ஸ் இல்லை என்றால் அதற்கு பதிலாக அரிசி மாவு மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளலாம். பின்னர் இந்த எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை ஸ்கிரப்பர் போல முகத்தில் அதிக அழுத்தம் கொடுக்காமல் முன்னும், பின்னுமாக 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
முகம், கை, கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் எங்கெல்லாம் உங்களுடைய நிறம் மங்கி இருக்கிறதோ, அந்த இடங்களில் எல்லாம் இவ்வாறு பத்து நிமிடம் லேசாக அழுத்தம் கொடுக்காமல் ஸ்கிரப் போல தேய்த்து விட்டால், சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் புத்துணர்வு அடையும். 10 நிமிடம் மசாஜ் செய்த பின்பு முகத்தை கழுவிக் கொள்ளலாம். உங்களுக்கு நேரம் இருந்தால் மீண்டும் ஒருமுறை அந்த கலவையை எடுத்து முகம், கை, கால், கழுத்து பகுதிகளில் தடவி நன்கு உலர விட்டு விடுங்கள். ஒரு 15 நிமிடம் நன்கு உலர விட்டு, பின்னர் நீங்கள் சுத்தம் செய்து விட்டால் முகம் பளிங்கு போல பளிச்சென மின்னும்.
Comments
Post a Comment