ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டதா; அதனை டிராக் செய்ய சில எளிய டிப்ஸ்..!!
- Get link
- X
- Other Apps
ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், நம் உலகம் நின்றுவிடும் என்பது போன்ற சூழ்நிலையில், உங்கள் தொலைந்த ஸ்மார்ட்ஃபோனை எளிதாக டிராக் செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம்.
- ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் செய்யவேண்டியவை
- ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள தொலைபேசியையும் டிராக் செய்ய முடியும்
- iOS மற்றும் Android சாதனங்களுக்கான சில டிப்ஸ்.
இன்றைய காலக்கட்டத்தில், நாம் அனைவரும் பல அன்றாட விஷயங்களுக்கு கூட, ஸ்மார்ட்போன்களை சார்ந்து இருக்கும் நிலை உள்ளது. ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், நம் உலகம் நின்றுவிடும் என்பது போன்ற சூழ்நிலையில், உங்கள் தொலைந்த ஸ்மார்ட்ஃபோனை எளிதாக டிராக் செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம்.
உங்கள் ஃபோனை தொலைத்துவிட்டால், முதலில் உங்கள் ஃபோன் எண்ணை அழைக்க உடனே முயற்சிக்கவும், உங்கள் நேரம் சரியாக இருந்தால், அருகிலேயே உங்களுக்கு கிடைக்கலாம். உங்கள் தொலைந்து போன போனை ஒரு நல்ல நபர் கையில் கிடைத்திருந்தால், ஃபோனை கால் செய்வதன் மூலம், அது மீண்டும் உங்கள் கைகளில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எப்போதும் உங்கள் மொபைலில் பாஸ்வேர்ட் வைத்திருப்பது நல்லது. இதனால் அனைவராலும் அதை அணுகுவது சற்று கடினமாக இருக்கும். மேலும் அதைக் கண்டுபிடிக்க உங்களுக்கும் சிஈற்து கால அவகசம் கிடைக்கும்.
ஆண்ட்ராய்டு (Android) பயனர்கள் டிராக் செய்யும் முறை
ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், உங்கள் ஃபோன் காணாமல் போனால், அதைக் கண்டறிய Android சாதன நிர்வாகியில் உள்ள 'Find my device' என்ற அம்சத்தைப் பயன்படுத்தலாம். உங்கள் போனின் GPS அம்சம் இயக்கப்பட்டிருந்தால் மட்டுமே Android சாதனத்தின் இருப்பிட டிராக் சேவை செயல்படும் என்பதை நினைவில் கொள்ளவும், இல்லையெனில் இந்த அம்சம் எந்தப் பயனும் இல்லை. 'Android.com SlashFind' இல் உள்நுழைவதன் மூலமும் உங்கள் மொபைலின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சி செய்யலாம். இதைச் செய்வதன் மூலம், 'Lost Phone', என்ற ஆப்ஷனைப் பார்ப்பீர்கள், இதன் உதவியுடன் நீங்கள் தொலைபேசியை எளிதாக ட்ராக் செய்வதோடு தரவுகளையும் நீக்கலாம்.
ஐபோன் (iPhone) பயனர்கள் டிராக் செய்யும் முறை
ஐபோன் (iPhone) பயனர்கள் ஃபோனை தொலைத்துவிட்டால், முதலில் உங்கள் ஆப்பிள் ஐடியுடன் உள்நுழைந்து மற்றொரு சாதனத்தில் 'லாஸ்ட் மோட்'ஐ இயக்கவும் அல்லது ஆப்பிளின் 'ஃபைன்ட் மை ஐபோன்' அம்சத்தையும் பயன்படுத்தலாம். 'Find My Network' என்பதன் உதவியுடன், ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட 24 மணிநேரம் வரை உங்கள் ஃபோனைக் ட்ராக் செய்யலாம். உங்களிடம் வேறு ஆப்பிள் சாதனம் இல்லையென்றால், iCloud.com தளத்திற்கு சென்று இந்த அம்சங்களையும் பயன்படுத்தலாம்.
ALSO READ : WhatsApp இல் உடனே இதை செய்யுங்கள்.... இல்லை ஆபத்து?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment