நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகத்தில் அசிங்கமாக தெரியும் கரும்புள்ளியை மறைக்கனுமா? இதோ சில டிப்ஸ்

 பொதுவாக முகப்பருக்களை தற்காலிகமாக சரி செய்தாலும் கூட, அதனால் உருவாகும் கரும்புள்ளிகள் நமது சருமத்தில் நிரந்தரமாக இருந்து விடுகிறது.

ந்த கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருவை எதிர்த்துப் போராட நாம் பல்வேறு வழிகளை முயற்சி செய்தாலும் சில சமயங்களில் நிரந்தர தீர்வினை தராது.

கரும்புள்ளிகளை எளியமுறையில் மறைய வைக்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.


  • உப்பினை நீரில் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரினால் கழுவ வேண்டும். பருக்களால் வந்த கரும்புள்ளிகள் தழும்புகளை மறைக்க உப்பு சிறந்த பொருள். பருக்கள் உடைந்து மற்ற இடங்களில் பட்டால் பருக்கள் மற்ற இடங்களுக்கும் பரவ ஆரம்பிக்கும்.

  • பூண்டினை அரைத்து பேஸ்ட் செய்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மட்டுமின்றி கரும்புள்ளிகளும் நீங்கும்.

  • முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகப்பருக்கள் குறைவதோடு கரும்புள்ளிகளும் நீங்கும். அதிலும் முட்டையின் வெள்ளைக் கருவையும் எலுமிச்சை பழ சாற்றினையும் சேர்த்து தடவினால் இன்னும் சிறந்த பலன் கிடைக்கும்.

  • வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் ஊற வைத்து சுத்தமான தண்ணீரால் கழுவதன் மூலம் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.

  • கற்றாழை சாற்றினை இரவில் முகத்தில் தடவி ஊற வைத்து காலையில் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் சரும தொற்றுக்கள் நீங்கும்.   

  • வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

  • இலுப்பை இலையை மைபோல் அரைத்து இரவில் பூசி காலையில் கழுவி வர கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகும்.

  • ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்

  • இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

  • உருளை கிழங்கை வெட்டி கரும்புள்ளிகள் மீது தேய்த்து வர கரும்புள்ளிகள் மறையும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்