Sharp Memory: மறதி அதிகம் இருக்கிறதா; இந்த ‘3’ எளிய பயிற்சிகளை ட்ரை பண்ணுங்க..!!
- Get link
- X
- Other Apps
தற்போதையை வாழ்க்கை முறை மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக மறதி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது.
- உடற்பயிற்சி மூளை நினைவாற்றலை பெருக்கும்.
- தற்போதையை வாழ்க்கை முறை காரணமாக மறதி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது.
- நினைவாற்றலை அதிகரிக்க உதவும் ‘ மூளை ஜிம் பயிற்சிகள்’.
தற்போதையை வாழ்க்கை முறை மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக மறதி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. பலருக்கு சிறிய விஷயங்களை நினைவில் கொள்வதில் சிக்கல் இருக்கிறது. உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உங்கள் கவனத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும் ‘ மூளை ஜிம் பயிற்சிகள்’ பெரிதும் உதவும்.
இந்த எளிய உடற்பயிற்சிகள், மூளையின் திறனை மேம்படுத்துவதால், இவை மூளை ஜிம் பயிற்சிகள் எனப்படுகின்றன. மூளைப் பயிற்சிகளின் உதவியுடன், மறதியை சில நாட்களிலேயே குணப்படுத்த முடியும். உங்கள் மனதை ஒருமுகப்படுத்தும் மூன்று எளிய பயிற்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. குறுக்கு பயிற்சிகள் (Cross Crawl)
முதலில், உங்கள் கால்களை சிறிது பரப்பிக் கொண்டு நேராக நிற்கவும். உங்கள் தோள்களும் மார்புகளும் நேரான நிலையில், உங்கள் கண்கள் பார்வை முன் நோக்கி இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு, உங்கள் வலது கையை உங்கள் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும்.
இப்போது நீங்கள் உங்கள் இடது காலை மேலே தூக்கி, இடது முழங்காலை வளைக்க வேண்டும்.
பின்னர் உங்கள் வலது முழங்கையை வளைத்து, வலது முழங்கையால் இடது முழங்காலைத் தொடவும்.
இப்போது மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும். அதன் பிறகு உங்கள் இடது கை மற்றும் வலது காலால் அதையே செய்யுங்கள். 8-8 முறை செய்யுங்கள் உங்களுக்கு முழங்காலில் காயம் அல்லது பாதிப்பு இருந்தால், பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது உடலை பேலனஸ் செய்வதில் பிரச்சனை இருந்தால், நாற்காலியில் அமர்ந்து கூட இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.
2. கணுக்கால் தொடுதல் (Ankle Touch)
முதலில், உங்கள் கால்களை சிறிது பரப்பிக் கொண்டு நேராக நிற்கவும். உங்கள் கைகளை உயர்த்தி, முழங்கைகள் சற்று வளைந்த நிலையில் நிற்கவும். இப்போது வலது காலை உயர்த்தி, உங்கள் இடது கையால் வலது கணுக்காலைத் தொடவும். அதன் பிறகு வலது பாதத்தை கீழே கொண்டு வந்து இடது பாதத்தை உயர்த்தவும். பின்னர் உங்கள் வலது கையால் உங்கள் இடது கணுக்காலைத் தொடவும்.
இதை 15-20 முறை செய்யவும்.
3. முதுபுறத்தில் இருந்து தொடுதல்
இதை செய்ய கணுக்கால் தொடும் பயிற்சியைப் போல, கால்களை சிறிது பரப்பி வைத்து, உங்கள் கைகளை மேலே வைத்து, முழங்கைகள் சற்று வளைந்த நிலையில் வைத்துக் கொள்ளவும். உங்கள் வலது காலை உயர்த்தி, உங்கள் உடலின் பின்புறத்தை நோக்கி உங்கள் இடது கையால் உங்கள் வலது கணுக்காலைத் தொட முயற்சிக்கவும். இதைச் செய்யும்போது, நீங்கள் சிறிது பக்கமாக சாய்ந்து கொள்ளலாம். அதன் பிறகு உங்கள் வலது காலை தரையில் வைத்து இடது காலை உயர்த்த வேண்டும். பின் முதுகு பக்கத்திலிருந்து உங்கள் வலது கையால் உங்கள் இடது கணுக்காலைத் தொட முயற்சிக்கவும்.
இதை 15-20 முறை செய்யவும்.
also read : எப்போதும் அழகா இருக்க சிம்பிள் டிப்ஸ்! முயற்சி செய்தா நீஙகளே எவர்கிரீன் ஹீரோ
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment