நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒன்றரை லட்சத்துக்கு ஆன்லைனில் ஆர்டர்… சிறுவனின் சேட்டையால் நொந்துபோன பெற்றோர்

 22 மாதங்களே ஆன சுட்டி குழந்தை, வால்மார்ட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்துக்கு பொருள்களை ஆர்டர் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


மெரிக்காவில் வசிக்கும் பிரமோத் – மது தம்பதியினரின் வீட்டிற்கு, திடீரென வால்மார்ட்டில் இருந்து பெரிய பெரிய பாக்ஸ்களில் தொடர்ச்சியாக பர்னிச்சர் பொருள்கள் வந்திறங்கியுள்ளது. இருவரும் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை என்பதால் குழப்பத்தில் இருந்துள்ளனர். பின்னர் விசாரிக்கையில் தான், இந்தச் சுட்டி தனத்திற்கு பின்னால் தங்களது 22 மாத குழந்தை அயான்ஸ் இருப்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

நியூ ஜெர்சியில் குடியேற போகும் வீட்டிற்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை அயான்ஸ் தாயார் வால்மார்ட் கார்ட்டில் ஸ்லெக்ட் செய்து வைத்திருந்துள்ளார். ஆனால், அதன் பிறகு அதனை செக் செய்யவில்லை.

இதற்கிடையில், செல்போனை விளையாடும் எடுத்த அயானஸ், ஒருபடி மேல் சென்று கார்ட்டில் வைத்திருந்த பொருள்களை வரிசையாக ஆர்டர் செய்துள்ளார். கிட்டத்தட்ட $2,000 (இந்திய மதிப்பில் ரூ. 1.49 லட்சத்துக்கு மேல்) மதிப்புள்ள மலர் ஸ்டாண்டுகள், நாற்காலிகள் மற்றும் பிற பர்னிச்சர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

சிறுவனின் தந்தை பிரமோத் குமார் கூறுகையில், ” இந்நிகழ்வு மூலம் வீட்டில் உள்ள கேட்ஜேட்களை பத்திரமாக வைக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டோம். இதுமட்டுமின்றி, செல்போனுக்கு பாஸ்வேர்ட் போடுவதன் அவசியத்தையும் புரிந்துகொண்டோம்” என்றார்.

அயான்ஸ் வால்மார்டில் ஆர்டர் செய்த பொருள்கள் அனைத்தும் டெலிவரி செய்யப்பட்ட பிறகு அதனை உள்ளூர் வால்மார்ட் கடையில் ரிட்டன் செய்யவுள்ளதாக தம்பதியினர் தெரிவித்தார்.

முக்கியமாக, சிறுவனை அறியாமையை புரிந்தகொண்ட அந்நிறுவனம், ரிட்டன் செய்யப்படும் பொருள்களுக்கு முழு பணம் தருவதாகவும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

அயான்ஸ் ஆர்டர் செய்த பொருள்களில் சிலவற்றை மட்டும், மகனின் முதல் ஆன்லைன் ஷாப்பிங் என்ற நியாபகத்திற்காக வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.


ALSO READ : “அரைக்கிலோ டோலோ 650 கொடுங்கங்க” – ட்விட்டரை அதகளப்படுத்தும் மீம்ஸ்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!