நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மென்மையான ஒளிரும் சருமம் வேண்டுமா? நீங்களே வீட்டில் செய்யக்கூடிய சூப்பரான க்ரீம் இதோ!

இந்த இரண்டு பொருட்களுடன் மென்மையான, மிருதுவான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள்.

ஆரோக்கியமான சருமத்திற்கான மிக எளிதான வீட்டு வைத்தியத்தை நீங்கள் தேடுகிறீர்களா? பியூட்டி ப்ளாக்கர் வந்தனா கோஸ்வாமி’ உங்களுக்கான சரியான குறிப்பை தந்துள்ளார்.

“இந்த இரண்டு பொருட்களுடன் மென்மையான, மிருதுவான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள். உங்கள் முகத்தில் இருக்கும் பிக்மண்டேஷன் மற்றும் மந்தமான தன்மையை நீக்கும், ஒரு எளிய க்ரீமை நீங்களே வீட்டில் உருவாக்கலாம்!


க்ரீம் எப்படி செய்வது?

தேவையானவை

தயிர் – 1 டீஸ்பூன்

வைட்டமின் ஈ மாத்திரை – 1

செய்முறை

* ஒரு பருத்தி துணியை எடுத்து, அதை தயிரில் போட்டு, அதிகப்படியான தண்ணீரை பிழிந்து அகற்றவும்.

* வடிகட்டிய தயிரை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் வைக்கவும்.

8 வைட்டமின் ஈ காப்ஸ்யூலைச் சேர்த்து, கிரீமி கன்சிஸ்டன்சி வரும் வரை நன்கு கலக்கவும்.

எப்படி அப்ளை செய்வது?

* உங்கள் முகத்தில் கிரீமை = மேல்நோக்கி தடவி, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்யவும். உங்கள் சருமம் க்ரீமை முழுமையாக உறிஞ்சுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

தயிர் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பளபளப்பாக்கவும் உதவுகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் தோல் அமைப்பை மேம்படுத்துகிறது.

மறுபுறம், வைட்டமின் ஈ ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது.

தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு இந்த வீட்டு வைத்தியத்தை எப்போ முயற்சி செய்ய போறீங்க!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!