நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

WhatsApp இல் உடனே இதை செய்யுங்கள்.... இல்லை ஆபத்து?

 வாட்ஸ்அப்பில் பரிசோதனை செய்யப்படும் அம்சங்களை பற்றி துல்லியமான தகவல்களை பகிரும் வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோவின் (WABetaInfo) கூற்றுப்படி,


வாட்ஸ்அப் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் அம்சத்தை டெஸ்க்டாப் மற்றும் வெப் வெர்ஷன்களின் எதிர்கால அப்டேட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.


து தொடர்பாக வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட் ஆனது, வெப் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷனில் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் அம்சத்தை இயக்கும் மற்றும் முடக்கும் விருப்பத்தை காண முடிகிறது.

இந்த WhatsApp 2-Step அம்சம் வாட்ஸ்அப் மொபைல் ஆப் வெர்ஷனில் ஏற்கனவே உள்ளது.

ஒருவேளை நீங்கள் இன்னும் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டில் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை செய்யவில்லை என்றால் உடனே செய்து வைத்து கொள்ளுங்கள். அதற்கு பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.  


2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை இயக்குவது எப்படி?

  1. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறக்கவும்.
  2. பின்னர் செட்டிங்ஸ் விருப்பத்திற்குள் நுழையவும்.
  3. இப்போது அக்கவுண்ட் > 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் > எனேபிள் என்பதை கிளிக் செய்யவும்.
  4. பிறகு உங்களுக்கு விருப்பமான ஆறு இலக்க 'பின்'னை (PIN) உள்ளிட்டு அதை உறுதிப்படுத்தவும்.
  5. பின் அணுகக்கூடிய ஒரு மின்னஞ்சல் முகவரியை வழங்கவும்.
  6. ஒருவேளை மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் 'ஸ்கிப்' என்பதை கிளிக் செய்யவும்.

ஒருவேளை நீங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்காமல், உங்கள் பின்னை மறந்துவிட்டால், உங்கள் பின்னை மீட்டமைப்பதற்கு 7 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

ஏனெனில் மின்னஞ்சல் முகவரியை அதன் உறுதித்தன்மையை வாட்ஸ்அப் சரிபார்த்து இருக்காது என்பதால், ரீசெட் செய்வதில் தாமதம் ஏற்படும். எனவே சரியான மின்னஞ்சல் முகவரியை வழங்குவதையும் உறுதி செய்து கொள்ளவும்.  

வாட்ஸ்அப் வழியாக எப்படி 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை இயக்க முடியுமோ, அதே போல 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை முடக்கவும் முடியும் மற்றும் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனுக்கான பின்-ஐ மாற்றவும் முடியும். அதெப்படி என்கிற எளிய வழிமுறைகளை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை டிசேபிள் செய்வது எப்படி?

  1. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறக்கவும்.
  2. பின்னர் செட்டிங்ஸ் விருப்பத்திற்குள் நுழையவும்.
  3. இப்போது அக்கவுண்ட் > 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் > டிசேபிள் என்பதை கிளிக் செய்யவும்.

2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் பின்-ஐ மாற்றுவது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறக்கவும். பின்னர் செட்டிங்ஸ் விருப்பத்திற்குள் நுழையவும். இப்போது அக்கவுண்ட் > 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் > சேன்ஜ் பின் என்பதை கிளிக் செய்து விருப்பத்திற்கு ஏற்ப பின்-ஐ மாற்றிக் கொள்ளவும்.  ரகசிய குறியீட்டினை ரகசியமாக வைத்திருங்கள். இல்லை ஆபத்துதான்.




ALSO READ : Google Search அடிக்கடி செய்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான் 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!