நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இப்படி விண்ணப்பித்தா 60 என்ன? 1000 அப்ளிகேஷனுக்கும் வேலை கிடைக்காது!

 60 வேலைகளுக்கு விண்ணப்பித்த பெண்ணை யாருமே நேர்க்காணலுக்கு கூப்பிடவில்லை! ஆச்சரியத்தின் பின்னணி என்ன தெரியுமா?  


  • 60 வேலைகளுக்கு விண்ணப்பித்த பெண்
  • நேர்க்காணலுக்கு அழைப்பே வரவில்லை
  • என்னவொரு துரதிருஷ்டம்! காரணம் தெரியுமா?

23 வயதான பெண் வேலை தேடி 60 இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார், ஆனால் எந்த ஒரு இடத்திலிருந்தும் பதில் வரவில்லை. தனது நேரம் சரியில்லை என்று நொந்துக் கொண்ட பெண்ணுக்கு தனது தவறு புரிந்தபோது பிழை புரிந்தது.

இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும்போது, செய்யும் வேலையை சரியாக செய்வது மிகவும் முக்கியமானது. அதேபோல, வேலைக்கு விண்ணப்பிக்கும்போது சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

சுமார் 60 வேலைகளுக்கு விண்ணப்பித்த பெண்ணுக்கு  ஒரு இடத்தில் இருந்தும் பதிலே வரவில்லை. அதன்பிறகு, தனது சுயவிவரத்தை திருத்தி அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறார் அந்தப் பெண்.

அப்போதுதான், ஏன் யாரும் தன்னை வேலைக்கு அழைக்கவில்லை என்று அவருக்கு புரிந்ததும், தவறுக்காக வருத்தப்பட்டதும், வெட்கி தலை குனிந்தாராம்!

I will never forget applying for jobs when I was 17 for months and never hearing anything back only to realise about 60 applications later I was attaching my period tracker and not my CV 

— Ashleigh Keenan (@AshleighKeenan) January 19, 2022

அப்படி என்ன தப்பு செய்துவிட்டார் இந்த பெண்? மிகப்பெரிய தவறு இல்லை என்றாலும், பொருத்தமான கோப்பை அனுப்புவதற்கு பதிலாக வேறு ஒரு ஃபைலை அனுப்பியதால் ஏறபட்ட தவறு, வேலை கிடைக்க விடாமல் தடுத்திருக்கிறது.

தனது தகுதிகள் மற்றும் சுயவிவரங்கள் கொண்ட கோப்பிற்கு பதிலாக, தனது மாதவிடாய் டிராக்கரில் நகலை இணைத்துவிட்டார்.

பீரியட் டிராக்கரின் நகல்

தி சன் செய்தியின்படி, 23 வயதான ஆஷ்லே கீனன், தனது ட்விட்டர் கணக்கில் ஒரு இடுகையில் தனது கதையைப் பகிர்ந்து கொண்டார், வேலைக்கு விண்ணப்பிக்கும் போது சுயவிவர குறிப்புக்கு பதிலாக பீரியட் டிராக்கரின் நகலை இணைத்ததால் தனது 60 விண்ணப்பங்களுக்கும் எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
 
அயர்லாந்தில் உள்ள டப்ளினில் வசிக்கும் ஆஷ்லே கீனன் என்பவர் ட்வீட் செய்துள்ளார், 'நான் பல இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்தும், ஆனால் ஏன் எந்தப் பகுதியிலிருந்தும் பதில் வரவில்லை என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எல்லா விண்ணப்பங்களிலும்  பீரியட் டிராக்கர் ஆவணத்தை இணைத்திருக்கிறேன், என்னுடைய CV அதில் இல்லை'.

இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த பிறகு, இந்த ட்வீட்டுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் வந்து குவிந்தன. சிரிக்க வைக்கும் உண்மைக் கதையை வெளியிட்ட ஆஷ்லேயை அனைவரும் கலாய்த்தனர்.  


ALSO READ : ‘கண்களில் ஏன் இந்த கண்ணீர்’: சுவாரஸ்ய தகவல்..!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!