நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரோட்டு கடையில் காரை நிறுத்தி ஐஸ்கிரீம் வாங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்! வைரல் புகைப்படம்

 அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், ரோட்டு கடையில் ஐஸ்கிரீம் வாங்கி சுவைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

க்களின் செல்வாக்கு மூலம் டிரம்பை வீழ்த்தி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவி ஏற்றவர் ஜோ பைடன். இவர் பதவி ஏற்று ஓராண்டு காலம் கடந்துவிட்ட நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் துரிதமாக செயல்பட்டு மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றுவிட்டார்.


இந்நிலையில் இவர் அமெரிக்காவின் Washington பகுதியில் உள்ள பாராக்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரிடம் காரை நிறுத்தும் படி கூறியுள்ளார்.

இதையடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய ஜோ பைடன் சாலை ஓரத்தில் இருந்த ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்து அங்கிருந்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

அதன்பிறகு இரண்டு கையில் இரண்டு ஐஸ்கிரீமை வாங்கி கொண்டு சாலை ஓரத்தில் நின்று சுவைத்து கொண்டிருக்கும் காட்சியானது இணையத்தை தீயாய் பரவி வருகின்றது.


இதை பார்த்த மக்கள் வயது ஆன பிறகும் சின்ன குழந்தை போல் ஐஸ்கீரிம் சாப்பிடுவதாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.    



ALSO READ : விண்வெளி வீரர்களின் சாப்பாட்டுக்கு ஐடியா கொடுத்தா ரூ.7.4 கோடி பரிசு! நாசாவின் அசத்தல் அறிவிப்பு;

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!