நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

80 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளம்பெண் - உயிர் பிழைத்த சுவாரஸ்ய சம்பவம்

 மலை உச்சியில் சைக்கிளிங் சென்றபோது 80 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளம்பெண், உயிர்பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.


ங்கிலாந்தின் லிவர்பூலின் புறநகர்ப் பகுதியான ஐக்பர்த்தைச் சேர்ந்தவர் காரா சட்டன் (26). கடந்த ஆகஸ்ட் மாதம், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட இவர், தனது காதலர் ஜேம்சுடன் (25) விடுமுறையைக் கொண்டாட சைக்கிளில் நார்த் வேல்ஸில் உள்ள கோட்-ஒய்-ப்ரெனின் என்ற இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றார். அங்கு மழை உச்சியின் ஓரத்தில் நின்று, இயற்கையின் அழகை ரசிக்கும்போது, நிலைதடுமாறி அவர் மலை உச்சியில் இருந்து சைக்கிளோடு கீழே விழுந்தார்.

இதனால் பதறிப்போன அவரது காதலர், காரா சட்டனைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், அவரும் கீழே தவறிவிழ இருந்தநிலையில் சுதாரித்துக்கொண்டு, தனது காதலியை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டார். காரா சட்டன் கீழே விழும்போது, அவருக்கு அருகில் சுமார் 5 மீட்டர் தூரத்தில் மருத்துவ ஊழியர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். காரா சட்டன் கீழே விழுந்ததும், உடனடியாக அந்த மருத்து ஊழியர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழட்டாத காரணத்தால், காரா சட்டன் உயிருடன் விமான ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


கால் எலும்பு முறிவு, இடுப்பு எலும்பு முறிவு, நுரையீரல் என உடலின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், காரா சட்டன் உயிர் பிழைத்தார். ராயல் ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனையில் சுமார் 2 மாதங்கள் சிகிச்சைபெற்று வந்தநிலையில், கடந்த இரண்டரை மாதங்களாக வீட்டில் பிஸியோ சிகிச்சை கொடுக்கப்பட்டு, மீண்டும் மெதுவாக நடக்க ஆரம்பித்துள்ளார் காரா சட்டன். மேலும், காரா சட்டன் சிகிச்சைபெற்றுவந்தபோது, அவரின் சகோதரர், நண்பர்கள், உடன் பணிபுரிபர்கள் மற்றும் காதலர் என அனைவரும் உற்சாகப்படுத்திக்கொண்டே வந்ததால், காரா சட்டன் மீண்டும் சற்று எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளார். காரா சட்டனின் சம்பவங்களை டாக்குமெண்ட்ரியாக எடுத்து 999 சேனல் வெளியிடுவதை அடுத்து இந்த சம்பவம் உலகிற்கு தெரியவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்