உலகிலேயே யாருமே கேள்விப்படாத விசித்திரமான காப்பீட்டு கோரிக்கைகள்!
- Get link
- X
- Other Apps
இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வித்தியாசமான உரிமைகோரல்களின் விசித்திரமான கதை இது... இது கதையல்ல காப்பீடு தொடர்பான உண்மையான சம்பவங்கள்...
- காப்பீடு பற்றிய புரிதலை கொடுக்கும் அனுபவப் பகிர்வு
- 300 ஆண்டு கால வரலாற்றில் வித்தியாசமான இன்சூரன்ஸ் க்ளெய்ம்கள்
- விசித்திரமான காப்பீட்டு உரிமைகோரல்.
லண்டன்:
இன்சூரன்ஸ் என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அவசியமானது. பெரும்பாலானவர்களுக்கு காப்பீடு பற்றியும், அதன் அவசியம் பற்றியும் தெரியும்.
காப்பீட்டுத் தொழில் பல நூற்றாண்டுகள் பழமையானது. ஆனால், 300 ஆண்டுகால இன்சூரஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவு வித்தியாசமான காப்பீட்டுக் கோரிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வித்தியாசமான உரிமைகோரல்களின் விசித்திரமான கதை இது... இது கதையல்ல காப்பீடு தொடர்பான உண்மையான சம்பவங்கள்....
உலகின் புகழ்பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனம் Aviva Insurance Company, இதுவரை செய்த விசித்திரமான இன்சூரன்ஸ் க்ளெய்ம்கள் குறித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை நினைவுபடுத்தி, அதை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துள்ளது.
இது பலருக்கு வித்தியாசமானதாக தெரிந்தாலும், காப்பீடு பற்றிய புரிதலை கொடுக்கும் அனுபவப் பகிர்வு இது. இப்படியெல்லாம் உண்மையாக நடக்குமா? என்ற கேள்வியும் எழலாம். இது உண்மை என்பதற்கு காப்பீட்டு நிறுவனமே சாட்சி.
ஷாம்பெயின் பாட்டில் சேதமடைந்ததால் காப்பீடு தேவை
'தி மிரர்' ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி இது. பிரிட்டிஷ் இன்சூரன்ஸ் நிறுவனம் தொடங்கி 325 ஆண்டுகள் நிறைவு செய்த சமயத்தில் இந்த விசித்திரமான காப்பீட்டு உரிமைகோரல்களின் கதைகளை பகிர்ந்துக் கொண்டுள்ளது.
இவற்றில் அதிக விசித்திரமானது ஷாம்பெயின் கார்க் தொடர்பான காப்பீட்டு வழக்கு. இது 1878ம் ஆண்டு கோரப்பட்ட இன்சூரன்ஸ் க்ளெய்ம்...
லண்டன் ஹோட்டலில் பணிபுரிந்த ஒருவருக்கு ஷாம்பெயின் பாட்டில் கார்க் மூலம் காயமாகிவிட்டதாம். அவர், ஷாம்பெயின் பாட்டிலைத் திறக்கும் போது அதன் கார்க், அதாவது பாட்டிலின் மூடி, அவரது கண்ணில் தெரித்தது.
நிறுவனம் கொடுத்த காப்பீட்டுத் தொகை
அந்த நபருக்கு காப்பீட்டு நிறுவனத்தால் £25 10s (தோராயமாக ரூ. 2550) வழங்கப்பட்டது, இது சுமார் இரண்டரை மாத சம்பளத்திற்கு சமம். 2550 ரூபாய் தானே என்று மட்டமாக நினைக்க வேண்டாம். இது 1878ஆம் ஆண்டின் கதை என்றால், இன்றைய பண மதிப்பில் கணக்கிட்டு பார்க்கவும்!
அதேபோல மற்றுமொரு வித்தியாசமான காப்பீட்டு உரிமைகோரல் இது. 1960 ஆம் ஆண்டு, ஷோரூமின் ஜன்னலை செம்மறி ஆடுகள் உடைத்ததால், ஷோரூமின் உரிமையாளர் காப்பீட்டு நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டார்.
இந்த வழக்கிலும் வாடிக்கையாளருக்கு நிறுவனம் இன்சூரன்ஸ் க்ளெய்ம் வழங்கியது.
பல் மருத்துவரின் வித்தியாசமான காப்பீட்டுக் கோரிக்கை
நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்த பல் மருத்துவரின் வித்தியாசமான காப்பீட்டு கோரிக்கை இது. சிகிச்சையின்போது, மயக்கத்தில் இருந்த நோயாளிக்கு திடீரென சுயநினைவு வந்துவிட்டது.
பல் மருத்துவரிடம் சண்டை போட்ட நோயாளி, அவரை தூக்கி ஜன்னலுக்கு வெளியே வீசிவிட்டார். இதற்கு இழப்பீடு கோரிய பல் மருத்துவருக்கு காப்பீடு தொகையை நிறுவனம் கொடுத்ததாம்!
ALSO READ : விமானத்தின் ‘டயர்’ பகுதியில் 11 மணி நேரம் பயணித்து உயிர் தப்பிய அதிசயம்.!!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment