நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் முழுவதும் வெள்ளையாக முகம் பளிச்சென்று அழகாக மாற இந்த ஃபேசியல் க்ரீம் வீட்டிலேயே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்

தினமும் வேலை செய்வதற்காக வெளியே சென்று வீடு திரும்புபவர்கள் சில நாட்கள் கழித்து அவர்களின் நிறம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிப்பதை கவனிக்க முடியும். 
குழந்தைகள் பெரியவர்களானதும் தங்களது கல்லூரி படிப்பை முடிக்கும் வரை வீட்டிலேயே இருக்கின்றனர். ஆனால் வேலைக்காக வெளியில் செல்லும் பொழுது தான் அவர்களின் தோலின் நிறம் மாற ஆரம்பிக்கிறது. இதுபோன்ற நேரத்தில் நமது முகம் மற்றும் உடல் நிறத்தை பராமரிக்காமல் விட்டு விட்டால் காலம் செல்லச் செல்ல நமது உடலின் நிறம் குறைய ஆரம்பிக்கும். இப்படிப்பட்ட பிரச்சனையில் இருந்து சுலபமாக விடுபட இந்த ஃபேசியல் க்ரீமை நீங்களே தயார் செய்து வைத்துக் கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறையாவது தேய்த்துக் குளிக்கும்போது உடல் பளிச்சென்று மாறிவிடும். முகமும் நல்ல பொலிவுடன் அழகான தோற்றம் கொடுக்கும். வாருங்கள் இந்த க்ரீமை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 2 ஸ்பூன், தேங்காய் – 4 சில்லு.


செய்முறை:

முதலில் 2 ஸ்பூன் பச்சை அரிசியை இரண்டு மூன்று முறை நன்றாக கழுவி விட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அல்லது நாம் செய்யக்கூடிய தினத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளலாம்.

பின்னர் மறுநாள் காலை இந்த அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அவற்றுடன் ஊற வைப்பதற்கு பயன்படுத்திய தண்ணீரையும் சேர்த்து ஒன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி இதனை நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் மூன்று சில்லு தேங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனையும் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி இதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரிசி அரைத்த சாறு மற்றும் தேங்காய் சாறு இவை இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு, அதனை அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும். இவை சிறிது நேரத்தில் இவை க்ரீம் பதத்திற்கு வர ஆரம்பிக்கும். இதனை செய்யும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்து விட்டு இதனை நன்றாக ஆற வைக்கவேண்டும்.

பிறகு இதனை ஒரு டப்பாவில் ஊற்றிக்கொண்டு ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்து ஒரு நாள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை சோப்பு போட்டு குளித்து முடித்தவுடன் உடல் முழுவதும் தடவி நன்றாகத் தேய்த்து குளிக்க வேண்டும். அல்லது முகத்திற்கு மற்றும் தடவுவதாக இருந்தால் இந்த கிரீமை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, நன்றாக மசாஜ் செய்த பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர உடலின் நிறத்தில் நல்ல மாற்றம் உண்டாகும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!