நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வலையில் சிக்கிய அதிசிய மீன்! ஒரே நாளில் பல லட்சங்களை அள்ளி சென்ற மீனவர்

 மீனவர் ஒருவர் கடலில் வீசிய வலையில் ராட்சத சுறா சிக்கியதால் ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறியுள்ளார்.


ன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியை சேர்ந்தவர் மெல்பின். இவர் தன்னுடைய படகில் சில மீனவ நண்பர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது மெல்பின் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென வலையில் ராட்சத சுறா ஒன்று சிக்கியுள்ளது. வலையில் சிக்கியது ராட்சத சுறா என்பதால் பைபர் படகில் ஏற்றி கடலுக்குள் கொண்டு வர முடியாது என்பதால் வலையோடு இழுத்தபடியே மீனவர்கள் துறைமுகம் வந்து சேர்ந்துள்ளனர்.

கரைக்கு வந்த சுறா மீன் சுமார் 10 அடி நீளமும், 2 டன் எடையும் கொண்ட அரிய வகை உடும்பு சுறா என்பது தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள மக்கள் அந்த மீனை வியப்புடன் பார்த்து சென்றனர்.


இந்நிலையில் அந்த ராட்சத சுறா சுமார் 1 லட்சம் ரூபாய் வரை விலை போனதால் சக மீனவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். பைபர் படகில் மீன் பிடித்து சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்த மெல்பின், தற்போது ஒரே நாளில் 1 லட்சம் ரூபாய் சம்பாதித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



ALSO READ : ராட்சத பாம்பின் நடுநடுங்க வைக்கும் காட்சி: நம்பமுடியாத உண்மை

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்