நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எடை இரண்டு மடங்கு வேகமாக குறைய 'இந்த' விதையை சாப்பிடுங்க.. யாரெல்லாம் தொடக்கூட கூடாது?

இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பொதுவான பிரச்சனையாகும்.


து கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே மிகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக அலுவலகங்கள் மூடப்பட்டு மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதனால், உடல் செயல்பாடுகள் குறைந்து, உட்கார்ந்த வாழ்க்கை முறையை வாழ்வது, அதிகப்படியான உணவு உண்பது ஆகியவை எடை அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளன.  


 நாம் சாப்பிடும் சில உணவுகள் எடை இழப்புக்கும் உதவி புரியும்.

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பார்கள்... காரம் மட்டும் இல்லை பலகும் பல மடங்கு அதிகம்.

உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சியுடன் சேர்த்து, ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் மற்றும் கடுக்காய் உணவில் ஒரு சிறந்த கூடுதலாக இருக்கும்.

இந்த விதைகள் கடுகு செடிகளிலிருந்து பெறப்படுகின்றன.


கடுகு விதைகள் எடையை குறைக்க எப்படி உதவும்?

கடுகு விதைகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

அவை எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல், நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்கும்.

இதில் இரும்புச்சத்து, கால்சியம், செலினியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மேலும் இந்த தாதுக்கள் அனைத்தும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பின்னர் எடை குறைக்கவும் உதவுகின்றன.

எச்சரிக்கை....

  1. கடுகு விதைகளை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொண்டால் அவை பாதுகாப்பானவை.
  2. கடுகு எந்த வடிவத்திலும் அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம்.
  3. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் கடுகு விதைகளை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.
  4. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் கூட கவனமாக இருக்க வேண்டும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்