ஆரோக்கியமா? அழகா? இரண்டையும் கொடுக்கும் எளிய உணவு...
- Get link
- X
- Other Apps
ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டிற்கும் தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகள் எவை தெரியுமா?
நமது தினசரி உணவில் முளைகட்டிய தானியங்களை சேர்ப்பதன் மூலம் உடலுக்கு அதிக அளவிலான ஊட்டச்சத்தைப் பெறலாம். ஒவ்வொரு மூலத்திலும் ஊட்டச்சத்தை ஒளித்து வைத்திருக்கும் முளைக் கட்டிய உணவுகள்...
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும், முடி வளர்ச்சியை மேம்படுத்தும் முளை கட்டிய தானியங்கள். பயறு மற்றும் விதைகள் என இயற்கையான ஊட்டச்சத்து உணவுகள் இருக்கும்போது அவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமாக இருக்கலாம்.
முளை கட்டிய பயறுகளில் இயற்கையான வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. இவற்றை அதிநவீன ஆய்வகங்களும் உருவாக்க முடியாது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத ஆரோக்கியத்தின் அடிப்படை மூலங்கள் முளைகட்டிய பயறுகளில் பொதிந்துள்ளன.
அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், இயற்கை சர்க்கரைகள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகளின் சிறந்த சமநிலையைக் கொண்டுள்ள முளை கட்டிய தானியங்கள், ஊட்டச்சத்தை சுலபமாக கொடுக்கிறது.
முளைகளின் பல நன்மைகள்
முளைகள் ஆரோக்கியம் மற்றும் அழகு ஆகிய இரண்டிற்கும் பெரும் நன்மைகளைத் தருகின்றன. நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றி, உடலை சுத்தப்படுத்துகின்றன.
வீட்டிலேயே சுலபமாக முளைக் கட்டலாம்
ஆரோக்கிய உணவு அல்லது மளிகைக் கடைகளில் முளைத்த பயறுகள் கிடைக்கும். ஆனால் அவற்றை வீட்டிலேயே சுலபமாக முளைக்கட்டலாம். கோதுமை, கொண்டைக் கடலை, பாசிப் பயறு, சோயா பீன்ஸ், பார்லி, தினை, விதைகள்,வெந்தயம் ஆகியவற்றை முளைக்கட்டலாம்.
ஒரு கைப்பிடி கொண்டைக்கடலை அல்லது ஏதேனும் பயறு வகைகளை எடுத்துக் கொள்ளவும்.
அவற்றை சுத்தம் செய்து நன்கு கழுவவும்.
முளைக்கும் நேரம் தானியத்திற்கு தானியம் வேறுபடும்.
24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
பிறகு அவற்றை நன்கு கழுவி, ஈரமான துணியில் கட்டி வைக்கவும். மூட்டையாக கட்டிய தானியத்தை தண்ணீர் வடியும் வகையில் தொங்க விடவும்.
அவ்வப்போது அந்த துணியை ஈரப்படுத்தவும்.
24 மணி நேரத்தில் முளை கட்டிவிடும்.
ஒரு அங்குல நீளம் வரை முளை கட்டினால் நல்லது.
பிறகு அவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுமார் அரை மணி நேரம் வெயிலில் வைக்கவும். நேரடியாக சூரிய ஒளியில் வைக்க வேண்டாம்.
ALSO READ : மலச்சிக்கலை தீர்க்கும் பாட்டி வைத்திய குறிப்புகள்.........
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment