கோபத்தை அதிகம் வரவழைக்கும் உணவுகள் இவைதான்! இனி சாப்பிடுவதை குறையுங்கள்
- Get link
- X
- Other Apps
மனிதனுக்கு பல்வேறு விதமான உணர்ச்சிகள் உள்ளது, அதில் முக்கியமானது தான் கோபம்.
கோபம் அதிகமாக வருவதற்கு குணாதிசயம் ஒன்று காரணமாக இருந்தாலும், உணவுகளும் முக்கிய காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா?
அந்த வகையில் ஒருவரது கோபத்தை சில வகை உணவுகள் அதிகமாக தூண்டும். அது போன்ற உணவுகளை குறைத்து கொள்வது நலம் பெயர்க்கும்.
தக்காளி
வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளுள் ஒன்றாக தக்காளி கருதப்படுகிறது. ஏனெனில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டால், அது கோபத்தை அதிகம் வரவழைக்கும். அதற்காக தக்காளியை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை, குறைவாக சாப்பிடுவது நல்லது.
கத்திரிக்காய்
ஒருவரது உடலில் இருக்கும் பித்த அளவில் இடையூறை ஏற்படுத்தும் மற்றொரு உணவுப் பொருள் தான் கத்திரிக்காய். அதே சமயம் இது கோபத்தையும் அதிகம் வரவழைக்கும் உணவுப் பொருளும் கூட. இதற்கு கத்திரிக்காயில் அசிடிட்டி அதிகம் இருப்பது காரணமாக இருக்கலாம்.
பொரிக்கப்பட்ட உணவுகள்
உடலின் ஒவ்வொரு உறுப்பும் குறிப்பிட்ட உணர்வுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. அதில் கல்லீரல் கோபத்தையும், நுரையீரல் சோகத்தையும், இதயம் மன இறுக்கம்/தூக்கமின்மையுடனும், சிறுநீரகம் பயத்தையும், மண்ணீரல்/கணையம் சிந்திப்பது/வேதனையுடனும் தொடர்பு கொண்டுள்ளது. எனவே தான் உணவு ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்பாட்டிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி, உணர்வுகளையும் பாதிக்கிறது. ஆகவே கல்லீரலை பாதிக்கும் உணவுகளைத் தவிர்த்தால், கோபம் அதிகம் வருவதைத் தவிர்க்கலாம். கல்லீரலுக்கு பாதிப்பை உண்டாக்கும் உணவுகளாக எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், ஆல்கஹால் போன்றவை உள்ளது.
கோபத்தை குறைக்க உதவும் உணவுகள்
வாழைப்பழம்
வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவதால், அதில் உள்ள வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மனதை அமைதி அடையச் செய்ய உதவியாக இருக்கும்.
சொக்லேட்
சொக்லேட் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அதிலும் டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால், அதில் உள்ள ஒருவிதமான கெமிக்கல், சந்தோஷமான மனநிலையைத் தந்து கோபத்தை குறைக்க உதவும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், அது உடலில் சந்தோஷமான மனநிலையை உண்டாக்கும், மேலும் கோபம் அடிக்கடி வருவதைத் தடுக்கும்.
also read : நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு டீ போதும்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment