மனைவி இறந்த பிறகு கிடைத்த உறவு... 37 ஆண்டுகளாக நன்றிக்கடன் செய்யும் அன்னப்பறவை.....
- Get link
- X
- Other Apps
தன்னை காப்பாற்றிய நபரை பிரியாமல் 37 வருடங்களாக அவருடனே வாழும் அன்னப்பறவை பற்றிய சுவாரஷ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ரிசெப் மிர்சான்(63) இவர் 37 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அன்னப்பறவை ஒன்று சாலையில் அடிபட்டுக் கிடந்தது.
காயத்தோடு அதை விட்டுச் சென்றால் வேறு உயிரினங்களால் ஆபத்து ஏற்படும் என்று கருதி அன்னப்பறவையை வீட்டிற்கு கொண்டு மருந்து தடவி சிகிச்சைக் கொடுத்துள்ளார்.
ஒருகட்டத்தில் அந்த அன்னப்பறவை பரிபூரண குணம் அடைந்துள்ளது. ஆனாலும் ரிசெப் மிர்சானை விட்டு அந்தப் பறவைச் செல்லவில்லை.
பொதுவாகவே அன்னப்பறவைகள் 12 ஆண்டுகள் மட்டுமே வாழும். ஆனால் மிர்சானிடம் இந்த பறவை வந்தே 37 வருடங்கள் ஆகிறது.
அவரோடு வாக்கிங் போவதில் இருந்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கூடவே செல்கிறது இந்த அன்னப்பறவை. ரிசெப் மிர்சானுக்கு மனைவி இறந்துவிட்டார்.
தனிமையில் இருக்கும் அவருக்கு இந்த அன்னப்பறவை உறவாக மாறி ஆறுதலை கொடுக்கின்றதாம். தன் இறக்கைகள் சரியான நிலையிலும், தன்னைக் காப்பாற்றிய நபரை விட்டு பிரியாமல் இருக்கும் அன்னப்பறவையின் புகைப்படங்களும் இணையத்தில் உலாவி வருகின்றது.
ALSO READ : தற்கொலை செய்துகொள்ளும் ஆண் காகம்... கூட்டமாக கரைய இது தான் காரணமா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment