நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆயுளை அதிகரிக்கும் 10 நிமிட நடைப்பயிற்சி: அமெரிக்க ஆய்வாளர்களின் ஆய்வில் தெரியவந்த நல்ல செய்தி

 10 நிமிட நடைப்பயிற்சி ஆயுளை அதிகரிப்பதாக, அமெரிக்க ஆய்வாளர்களின் ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

5,000 நடுத்தர மற்றும் வயதான அமெரிக்கர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்விலிருந்து, உடற்பயிற்சியின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க, உயிரிழக்கும் அபாயம் குறைவது தெரியவந்துள்ளது.  

நாளொன்றிற்கு 10 நிமிட, மிதமான நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சி, 40 முதல் 80 வயது உள்ளவர்கள் உயிரிழக்கும் அபாயத்தை ஆண்டொன்றிற்கு 7 சதவிகிதம் அளவுக்கு குறைத்துள்ளது அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

வாழ்க்கைமுறையில் செய்யப்படும் சிறியதொரு மாற்றம், ஆண்டொன்றிற்கு 100,000 அமெரிக்கர்களின் உயிரைக் காப்பாற்றக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.

மேலும், உடற்பயிற்சி செய்யும் அளவை, தினமும் 10 நிமிடங்களிலிருந்து 20 முதல் 30 நிமிடங்களாக அதிகரிப்பது, உயிரிழக்கும் அபாயத்தை, முறையே 13 முதல் 17 சதவிகிதம் வரை குறைப்பதாக தேசிய புற்றுநோய் ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.

வாரம் ஒன்றிற்கு 150 நிமிடங்கள், சைக்கிள் ஓட்டுதல் போன்ற மிதமான உடற்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஆக, மொத்தத்தில், வயதானாலும் சிறிய அளவிலாவது உடற்பயிற்சிகளை செய்துகொண்டே இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது என அந்த ஆய்வு காட்டுவதாக தெரிவிக்கிறார் அந்த ஆய்வை முன்னின்று நடத்திய Dr Pedro Saint-Maurice என்பவர்.



ALSO READ : வழுக்கைத் தலையிலும் முடி வளரனுமா? அப்ப இந்த வழிகளில் ஒன்றை பின்பற்றி பாருங்கள்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்