நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பயனர்களுக்கு வாட்ஸ்அப் வழங்கும் அசத்தலான புதிய வசதி!

 ஆண்ட்ராய்டில் உள்ள chatகளை ஆப்பிள் ios தளங்களுக்கு மாற்றும் வசதியினை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.   


  • ஆண்ட்ராய்டு போன்களில் இருந்து ios போன்களுக்கு chatகளை மாற்றுவதற்கான வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது
  • WABetaInfo அளித்த தகவலின் அடிப்படையில் chatஐ ios தளங்களுக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பொதுவாகவே சமூக வலைதளங்களில் அனைவராலும் அதிகம் விரும்பி பயன்படுத்தப்படும் ஒரு செயலி என்றால் அது வாட்ஸ்அப் செயலி தான்.  இது அனைவருக்கும் அணுகுவதற்கு எளிதாக உள்ளதால் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வாட்ஸ்அப் நிறுவனம் அடிக்கடி வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு பலவித அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. 

அவ்வாறு வெளிவரும் புது அப்டேட்டுகளில் தற்போது அசத்தலான அப்டேட்டை அறிமுகம் செய்து இருக்கிறது.  அதாவது ஆண்ட்ராய்டு போன்களில் இருந்து ஆப்பிள் ios போன்களுக்கு நேரடியாக chatகளை மாற்றுவதற்கான வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் வாட்ஸ்அப்  நிறுவனம் வெளியிட்ட அப்டேட்டில், iOS பயனர்கள் தங்கள் chatகளை samsung மற்றும் Google pixel போன்களுக்கு மாற்ற அனுமதியளித்தது, இவை மற்ற சாதனங்களுக்கும் கூடிய விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


WABetaInfo அளித்த தகவலின் அடிப்படையில் chatஐ ios தளங்களுக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன்மூலம் ஒரு தடவை மட்டும் chatகளை ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோன்களுக்கு மாற்றலாம், அதை தவறவிடும் பட்சத்தில் மீண்டும் chatகளை மாற்ற இயலாது.  'Move to iOS' செயலியை டவுன்லோடு செய்வதன் மூலம் contacts, chat, photos போன்றவற்றை பாதுகாப்பான முறையில் எளிதாக மாற்ற முடியும். டேட்டா மாற்றும் ஆப்ஷனை தேர்வு செய்ததும், அந்த செயலி தனிப்பட்ட wifi கனெக்ஷனை உருவாக்கி அருகிலுள்ள Android போன்களை காண்பிக்கும்.  அப்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்க வேண்டும். 


பின்னர் security codeஐ உள்ளிட்டபின் மாற்றம் செய்வதற்கான செயல்முறை தொடங்கிவிடும்.  இந்த செயல்முறையின்போது, செல்போன் மற்றும் செயலியை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும்.  மேலும் வாட்ஸ்அப் புகைப்படங்களை அனுப்புவதற்கு முன்னதாக, அதனை blur, pencil போன்றவற்றின் மூலம் எடிட் செய்யும் வசதியினையும் வழங்குகிறது.


ALSO READ : மனித மூளையில் Brain Chips பொருத்தினால் என்ன நடக்கும்? பரிசோதனைகள் விரைவில்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்