நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ராட்சத பாம்பின் நடுநடுங்க வைக்கும் காட்சி: நம்பமுடியாத உண்மை

 பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என சொல்வார்களே. ஆனால் இந்த வீடியோவை பார்த்தாலே போதும் அத்தனை நடுக்கங்கள் ஏற்படுகின்றன.

காட்டு விலங்குகளுக்கு பிறகு ஊர்வனவற்றில் நாம் அதிகமாக கண்டு அஞ்சுவது என்றால் அது பாம்புகள் ஆகும். காரணம், பாம்புகள் கடித்தால் மரணம் வரை நேரிடும் வாய்ப்புள்ளது என்பதால்!. அது போல் தேள்களும் அதிக விஷம் உடையவைதான். ஆனால் அவற்றை அடித்துவிடலாம்.

தேளை அடிப்பது போல் பாம்புகளை பிடிப்பதோ அடிப்பதோ அத்தனை எளிதல்ல. அப்போதெல்லாம் வாய்க்கால் வரப்பு, விவசாய நிலங்கள், புதர்கள் உள்ளிட்டவற்றில்தான் பாம்புகளை பார்த்த அனுபவம் உண்டு.

ஆனால் இன்று செய்திகளில் வருவது, வண்டியினுள் பாம்பு, இரு சக்கர வாகன என்ஜினில் பாம்பு, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் வைக்கும் இடத்தில், டாய்லெட், வாஷிங்மெஷின் என பாம்புகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்துவிட்டன. இதற்கு இன்னொரு காரணம் அதன் இருப்பிடத்தை நாம் ஆக்கிரமித்ததுதான்.

பொதுவாக சில பாம்புகள் மரம் ஏறும், சில பாம்புகள் சில அடி உயரம் வரை சுவரையோ அல்லது வேறு எதனையோ பிடித்து ஏறும் என சொல்வார்கள். ஆனால் பாம்புகள் மிக உயரமான சுவற்றில் ஏறியதை பார்த்துள்ளீர்களா? இந்த சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்தாலே மெய் சிலிர்க்கும் அளவுக்கு உள்ளது.

ஆம் தாய்லாந்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 58 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில்தான் பாம்பானது சுவற்றில் ஏறுகிறது. தாய்லாந்தில் செடிகள் வழியாக ஒரு இரும்பு கம்பியை பிடித்துக் கொண்டு சுவற்றில் மிகப் பெரிய கருப்பு நிற பாம்பு ஏறுகிறது. ஒரு புறத்தில் இருந்து இன்னொரு புறம் ஷிப்ட் ஆகும் போது அதை ஒரு பூனை கவனிக்கிறது.


ஆனால் இந்த பாம்பை பார்த்து அந்த பூனை பயந்து ஓடியிருக்கும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. அது எட்டி எட்டி பார்த்து என்னவாக இருக்கும் என பார்க்கிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதுவும் இத்தனை பெரிய பாம்பு பெரிய சுவற்றில் ஏறும் என என்னால் நம்ப முடியவில்லை என வீடியோவை பதிவிட்டவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் பாம்பின் நீளத்தையும் அதன் அடர்த்தியையும் பார்த்தால் மிகவும் அச்சத்தையே ஏற்படுத்துகிறது.



ALSO READ : மனைவி இறந்த பிறகு கிடைத்த உறவு... 37 ஆண்டுகளாக நன்றிக்கடன் செய்யும் அன்னப்பறவை.....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!