இணையத்தை கலக்கும் கொரோனா வடை ரெசிபி; ட்ரை பண்றீங்களா?
- Get link
- X
- Other Apps
கொரோனாவால் வீட்டில் முடங்கி இருப்பவர்கள் பொழுதைப் போக்க வித விதமான உணவுகளை சமைத்துச் சாப்பிட்டு வரும் நிலையில், சமூகவலைதளத்தில் ஒருவர் கொரோனா வடிவில் சமைத்த வடையின் ரெசிபி வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வந்தாலும், வீட்டில் இருப்போரின் படைப்பாற்றலுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
பொழுதைப் போக்க வித விதமாகச் சமைத்துச் சாப்பிட்டு வரும் நிலையில், சமூகவலைதளத்தில் ஒருவர் கொரோனா வடிவில் சமைத்த வடையின் ரெசிபி வீடியோவை பகிர்ந்துள்ளது இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
அந்த வீடியோவில், முதலில் அரிசி மாவு, சீரகம் , உப்பை சேர்த்து ஒரு மாவு கலவையை உருவாக்குகிறார். அதில், சிறு துளி ஹாட் வாட்டரை சேர்த்து நன்கு பிசைகிறார்.
இதற்கிடையில், வடைக்கான ஸ்டஃபிங் பிராசஸை தொடங்கிறார். உருளைக்கிழங்கு, வெங்காயம், துருவிய கேரட், கேப்சிகம், கறிவேப்பிலை மற்றும் சில அடிப்படை மசாலாக்களை சேர்த்து கடாயில் நன்கு வதக்கிறார். பின்னர், அந்த மசாலாவை உருண்டையாக உருட்டுகிறார்.
தொடர்ந்து, மாவை தட்டையாக்கி, அதன் மீது மசாலா உருண்டையை நடுவில் வைத்து, மொத்தமாக உருட்டிக்கொள்ள வேண்டும். தற்போது, அந்த உருண்டையை கொரோனா வடிவில் மாற்றும் பிராசஸை கண்டு இணையவாசிகள் வியப்படைந்தனர்.
தனியாக அரை கப் அரசியை ஒரு மணி நேரம் வாட்டரில் ஊறவைத்திருக்க வேண்டும். தொடர்ந்து, ஊறவைத்த அரிசியை அந்த உருண்டை மீது தேய்கிறார்.
இதையடுத்து, அரிசி தேய்த்த உருண்டையை, பாத்திரத்தில் 15 நிமிடம் வேகவைக்கப்படுகிறது. அவ்வளவு தான், பாத்திரத்தை ஓப்பன் செய்தால், கொரோனா வடிவலான வடையை காணமுடிகிறது.
இந்த கொரோனா வடையின் ரெசிபி வீடியோவை, ட்விட்டர் பயனாளர் மிம்பி என்பவர் ஷேர் செய்துள்ளார். வீடியோவை பகிரும் பலரும், இந்த கொரோனாவை கண்டு தங்களுக்கு பயமில்லை என பதிவிட்டு வருகின்றனர்.
கொரோனா பெருந்தோற்று ஆரம்ப காலம் முதலே, பல வகையான உணவு காம்பினேஷன்களை இணையத்தில் பார்த்து வருகிறோம். மேற்கு வங்க இனிப்புக் கடையின் கொரோனா மிஸ்டி முதல் வியட்நாம் சமையல்காரரின் கொரோனா பர்கர் வரையிலான உணவுகளும், இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.
ALSO READ : சிக்கனுடன் இதை சமைத்து சாப்பிட்டால் கொரோனா குணமாகுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment