நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தினமும் இந்த இலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? பலரும் அறியாத உண்மைகள் இதோ!

 கடுமையான சளி, வறட்டு இருமல் போன்ற நோய்களை குணப்படுத்த இயற்கையான துளசியை பயன்படுத்தாலாம்.


துளசியை செடியில் இருந்து பறித்து அலசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். அப்படி துளசி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..

  • தினமும் 20 துளசி இலையை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்றுநோய் குணமாகும். அதுபோல காலை, மாலை என இருவேளை ஒரு கப் தயிருடன் 20 துளசி இலையை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வறட்டு இருமல் போன்றவை குணமாகும்.

  • துளசி இலைச்சாறு ரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும். காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும். அதுமட்டும் இல்லாமல் தேவையில்லாமல் நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும்.

  • பேன், பொடுகு தொல்லை நீங்க துளசி சாறு எடுத்து அதனுடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும். துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்