நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ராட்சத யானையை அடக்கிய குட்டி தேவதையின் பாசம்...மிரள வைத்த காட்சி! கண் சிமிட்டாமல் பார்ப்பீங்க

 பொதுவாகவே மிருகங்கள் நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை. தமிழில் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம்.

அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. அதற்கு இந்த காட்சி மிக சிறந்த எடுத்து காட்டு குழந்தை மிரட்டலுக்கு அடங்கி விடுகின்றது.

எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி. குட்டிக் குழந்தை யானையோடு மிகவும் நெருக்கமாக துளியும் அச்சமின்றி அதனோடு கொஞ்சி, கொஞ்சி விளையாடுகிறது.  

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்