நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ மறந்து கூட இதை பயன்படுத்தாதீங்க!

 சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது ஒரே இடத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்யாதது போன்ற பல காரணங்களால் உடல் எடை விரைவாக கூடி விடுகின்றது. என்ன செய்தால் உடல் எடையை குறைக்கலாம் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்..


  • உடல் எடையை குறைக்க சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவையும் அவசியமாகிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் வெள்ளை சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் பயன்படுத்தலாம்.

  • பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், கலோரிகள் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை குறைக்க வேண்டும். ஆனால் சர்க்கரை மற்றும் வெல்லம் இரண்டிலுமே சம அளவு கலோரிகளே உள்ளன.

  • சர்க்கரை மற்றும் வெல்லம் இரண்டும் கரும்பு சாற்றில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும் அவற்றின் தயாரிப்பு செயல்முறைகள் வித்தியாசமானவை. கரும்பு சாறில் இருந்து சர்க்கரை பாகை மாற்ற கரி பயன்படுத்தப்படுகிறது.
  • மேலும் சர்க்கரை தயாரிக்க பல வகையான ஃபார்மலின் சேர்க்கப்படுகிறது. ஃபார்மலின் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய ரசாயண பொருளாகும். எனவே சர்க்கரை எடுத்துக்கொள்வது நிச்சயம் நல்லதல்ல.


ஆனால் வெல்லத்தில் எந்த வித ரசாயனமும் பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக அதன் ஊட்டச்சத்து மதிப்பு சர்க்கரையை விட அதிகம். இரும்பு, தாதுக்கள், நார், கார்போஹைட்ரேட், புரதம், பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.



Comments

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?