சிக்கனுடன் இதை சமைத்து சாப்பிட்டால் கொரோனா குணமாகுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
- Get link
- X
- Other Apps
சிக்கனில் இருமல் மருந்தை கலந்து சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என்கின்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உலகில் உள்ள பல விஞ்ஞானிகள் மற்றும் டாக்டர்கள் இந்த கொரோனா வைரஸை ஒழிக்க தீவிரமாக போராடி வருகின்றனர். அந்த வகையில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
கொரோனா வராமல் தடுக்க மக்கள் கசாயங்களைப் போட்டு குடித்து வருகின்றனர். வெளிநாடுகளிலும் இதுபோன்ற விஷயங்களை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான உணவு தான் தற்போது டிக்டாக்கில் ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில் சிக்கனில் இருமல் டானிக்கை ஊற்றி சமைத்து சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்கின்றது. ஆனால் இதை பார்த்த டாக்டர்கள் பலரும் யாரும் இதை வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
இருமல் மருந்து சேர்த்து சிக்கனை சமைத்து சாப்பிட்டால் அது உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் இருமல் மருந்தை சிக்கனில் ஊற்றி சமைப்பதால் உயிருக்கு ஆபத்தாக மாற கூடிய வாய்ப்பு உள்ளது.
ALSO READ : 125 நாகப்பாம்புகளுக்கு இடையில் கிடந்த நபர்! அலறியடித்த பக்கத்துவீட்டினர்கள்; பகீர் சம்பவம்!
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment